மேலும் அறிய
Advertisement
சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை எப்போது முடியும் ? - மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 17 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை- ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றத்தில் விரைவாக நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்" என சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை- ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றத்தில் ஆறு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், 6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை- ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க மேலும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது .
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி முரளிசங்கர், சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு குறித்த வழக்கில், தற்போது வரை விசாரணை எந்த நிலையில் உள்ளது? விசாரணையை முழுவதும் நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இது குறித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
நிதிநிறுவன மோசடி வழக்கு - காவல்துறையில் விளக்கம் கேட்டு பதில் தர அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் பீரங்கிமேடு பகுதியைச்சேர்ந்த கரிகாலன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில்தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, பாதுகாப்புத்துறையின்கீழ் உள்ள திருச்சி கன அலாய் ஊடுருவல் திட்டத்தில் பணியாற்றி கடந்த 2019 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றேன். ஓய்வு பலனாக 30 லட்சம் வழங்கப்பட்டது. இந்த தொகையைக்கொண்டு எனது 2 மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருந்தேன். அந்த சமயத்தில் திருச்சி தில்லைநகரில் ஆயுசுநூறு என்ற நிதி நிறுவனத்தில் குறுகிய கால முதலீட்டுத்திட்டங்கள் இருப்பதாக அறிந்து, அதன் நிர்வாக இயக்குனர் சிவபாலன் மற்றும் சிலரை சந்தித்தேன். மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டிற்கு உரிய பொருட்களை விற்கும் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் விற்பனைக்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் பங்குத்தொகை, ஊக்கத்தொகையை மாதந்தோறும் அளிப்பதாக கூறினர். அவர்களின் கவர்ச்சிகரமான பேச்சை நம்பி என் பெயரிலும், எனது மனைவி பெயரிலுமாக ரூ.27 லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு செய்தேன். நான் மட்டுமல்லாமல் எனது மனைவியுடன் பணியாற்றும் சக ஆசிரியைகள் உள்ளிட்டவர்களும் இந்த நிதிநிறுவன திட்டங்களில் பல லட்சங்களை முதலீடு செய்தனர்.
திடீரென ஊரடங்கை காரணம் காட்டி நிதிநிறுவனத்தை மூடிவிட்டனர். வட்டியோ, ஊக்கத்தொகையோ எதையும் எங்களுக்கு தரவில்லை. இந்த மோசடி குறித்து பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே நிதிநிறுவனம் நடத்தி எங்கள் பணத்தை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அந்த பணத்தை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட போலீசில் விளக்கம் கேட்டு தெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை வருகிற 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion