மேலும் அறிய
Advertisement
Watch video: தலையில் தண்ணீர் பாட்டிலை வைத்தபடி தத்ருபமாக கரகம் ஆடிய சிறுமி - வியப்பில் பார்வையாளர்கள்
சிறுமி தலையில் வாட்டர் கேனை வைத்து தத்துரூபமாக கரகாட்டம் ஆடுவது போல கலைநயத்தோடு ஆடுவதும் பதிவாகியுள்ளது.
மதுரை சங்கமம் நம்ம ஊரு திருவிழா
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுதுறை சார்பாக மதுரை சங்கமம் நம்ம ஊரு திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சா மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முரசு கொட்டி துவக்கி வைத்தார்கள்.
மதுரையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தலையில் தண்ணீர்பாட்டிலை வைத்தபடி தத்ருபமாக கரகம் ஆடிய சிறுமி. சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகும் வீடியோ. கலை பண்பாட்டு துறை சார்பில் மதுரை சங்கமம் நம்ம ஊர் திருவிழா என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.@SRajaJourno @k_for_krish @abpnadu pic.twitter.com/magDKVhkwJ
— arunchinna (@arunreporter92) February 18, 2024
இவ்விழாவில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.செ.சங்கீதா மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இவ்விழாவில் முதல் நாளான கலைநன்மணி வேலு ஆசான் குழுவினரின் துவக்கி விழா கலைநிகழ்ச்சியில் நையாண்டிமேளம், கரகாட்டம், மாடாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மரக்காலாட்டம், புலியாட்டம், அம்மன் ஆட்டம், ஜிம்ளா மேளம், கொங்கு இசை, மயிலாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம், புரவியாட்டம், மதிச்சியம் பாலாவின் தெம்மாங்கு பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆதனை தொடர்ந்து இராமநாதபுரம் மருங்கன் குழுவினரின் நையாண்டிமேளம் கரகாட்டம், திண்டுக்கல் ராதாரவி குழுவினரின் தப்பாட்டம், சிவகங்கை பாரதி சண்முகம் குழுவினரின் கருப்பசாமி ஆட்டம், தேனி வெள்ளைப்பாண்டி குழுவினரின் தேவராட்டம், மதுரை ஐயப்பன் குழுவினரின் காளி ஆட்டம் மற்றும் தீச்சட்டி ஆட்டம், மதுரை பனையூர் திரு.ராஜா குழுவினரின் தப்பாட்டம், நிகழ்ச்சி நிறைவாக திண்டுக்கல் ஆண்டிச்சாமி குழுவினரின் வீரமங்கை வேலுநாச்சியார் குழுவினரின் இசை நாடகம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
அப்போது கலை நிகழ்ச்சியை காண வந்த சிறுமி ஒருவர் மேடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த கலை நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தார். அதில் கரகாட்ட கலைஞர்கள் தலையில் கரகம் வைத்து கரகாட்டம் ஆடியபடி தங்கள் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த சிறுமி மேடை அருகே நின்றபடி தன் தலையில் வாட்டர் கேன் வைத்த படி கேன் கீழே விழுகாமல் கரகம் எடுத்து ஆடுவது போல ஆடிக்கொண்டே இருந்தார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்த அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் அது ட்ரெண்டாகிவருகின்றனது. அந்த வீடியோவில் சிறுமி தலையில் வாட்டர் கேனை வைத்து தத்துரூபமாக கரகாட்டம் ஆடுவது போல கலைநயத்தோடு ஆடுவதும் பதிவாகியுள்ளது இதற்கு பல்வேறு தரப்பினரும் சிறுமிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "பா.ஜ.க.,வில் சேருபவர்கள் பொண்டாடியை பத்திரமாக பார்த்துகொள்ளுங்கள்" - ஆ.ராசா வேதனை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion