"பா.ஜ.க.,வில் சேருபவர்கள் பொண்டாடியை பத்திரமாக பார்த்துகொள்ளுங்கள்" - ஆ.ராசா வேதனை
வேதனையோடு சொல்கிறேன். பாஜகவில் சேருபவர்கள் பொண்டாடியை பத்திரமாக பார்த்துகொள்ளுங்கள், அண்ணன் தம்பியை மகனை பிரிக்கிறார்கள். பயமாக இருக்கிறது என மதுரை பொதுக்கூட்டத்தில் அ.ராசா பேச்சு.
நாடாளுமன்றத் தேர்தல் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் மதுரை அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா பேசியபோது, ”காலில் முள் குத்தினால் கண்ணில் கண்ணீர்வரும் என்ற அளவிற்கு ஒற்றுமையாக உள்ளோம் என மோடி பேசுகிறார். ஆனால் தூத்துக்குடி, சென்னை, திருநெல்வேலியில் மழை வந்தது எத்தனை பேர் இறந்தார்கள் எவ்வளவு வீடுகள் காணாமல் போனது எவ்வளவு பயிர் நாசமாக போனது. ஹெலிகாப்டரில் வந்தார்கள், மாமி நிர்மலா வந்தாங்களே கனிமொழி கைய புடிச்சு குலுக்கினார்கள், நான் கூட கனிமொழியிடம் நிறைய பணம் வாங்கிட்டீங்களா என கேட்டேன். தூத்துக்குடிக்கு எதுவும் ஸ்பெஷலா போட்டுட்டீங்களானு கேட்டேன். பெண் என்றால் பேயும் இறங்கும் என உண்மையில் நினைத்தேன். கனிமொழியை கொண்டு நிர்மலா இறங்கும் என நினைத்தேன். அது தண்ணீரில் கூட இறங்கவில்லை. அப்படியே தரையில் வந்து டாடா காமித்து விட்டு சென்றுவிட்டது. நாடாளுமன்றத்தில் எதை கேட்டாலும் ஜெய் ஸ்ரீ ராம் பாரத் மாதா கி ஜே என்பது தான் ஒரே பதிலாக இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு நிதி எங்கே என கேட்டாலும், தமிழ்நாட்டுக்கு ரயில் என்னாச்சு என்றாலும் பாரத் மாதா கி ஜெய் ஸ்ரீ ராம் இப்படி தான் பதில் வருகிறது.
இந்து என்று நீங்கள் சொல்லக்கூடிய 90 முதல் 95 பேருக்கு நாங்கள் தான் எல்லா உரிமைகளையும் வாங்கிக் கொடுத்தோம். இந்த அம்மா அக்கரசல் பொங்கல், பெருமாள் கோவிலில் சுண்டல் வாங்கி சாப்பிட்டுவிட்டு நாங்களும் இந்துக்கள் தான் என்று சேர்ந்துகொண்டு எங்களை இந்துக்கள் எதிரியை என்கிறீர்கள். பல நூற்றாண்டுகளாக இந்துக்களில் பல்வேறு சாதியினரை படிக்க விடாமல் வைத்திருந்தனர். நாங்கள் இந்துக்களுக்கெல்லாம் விரோதி என பூச்சாண்டி காட்டுகிறீர்களா? மணிப்பூரில் கோவாவில் ஆட்சி அமைக்கிறார்கள். ஆனால் ஜெயித்தார்களா? ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு மோடிக்கு எந்த தகுதியும் இல்லை. ஜனநாயகம் என்றால் என்ன? வெற்றி பெற்று வருபவனை விலைக்கு வாங்குகிறீர்கள். அதில் என்ன அர்த்தம். வேதனையோடு சொல்கிறேன். பிஜேபியில் சேருகிறவர்கள் முதலில் பொண்டாட்டியை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அண்ணன் தம்பியை பிரிக்கிறான். மகனை பிரிக்கிறான். பயமாக இருக்கிறது. அஜித் பவர் மீது 70 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சென்றது. நெருக்கடியை தாங்க முடியாமல் பாஜகவில் சேர்கிறார். அடுத்த நாள் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது.
வாஷிங் பவுடர் நிர்மா விளம்பரத்தில் அழுக்கு துணியை உள்ள விட்டால் வெளியில் வெள்ளையாக வரும். அதுபோல எவ்வளவு பெரிய ஊழல்வாதியாக இருந்தாலும் பிஜேபி என்ற மிஷினுக்குள் சென்று விட்டால் வெளியில் வெள்ளையாக வரலாம். இப்படி ஒரு மோடி மஸ்தான் வித்தையை கண்டுபிடித்த வித்தைக்காரர் தான் நரேந்திர மோடி. நாடாளுமன்றத்தில் பல பிரதமர்களை குடியரசு தலைவர்களை உருவாக்கித் தந்தவர் தலைவர் கலைஞர். கலைஞரிடமே நீங்கள் பிரதமராக இருக்க வாய்ப்பு இருக்கிறது வருகிறீர்களா ? என கேட்டார்கள். அப்போது என் உயரம் எனக்கு தெரியும் என கலைஞர் பதிலளித்தார். இந்தியாவை ஆளுவதற்கும் பாசிசத்தை வீழ்த்துவதற்கும் தகுதியான தலைவர் தான் இது போன்ற கூட்டத்தை முன்னெடுத்துள்ளா.ர் நாடாளுமன்றத்தில் கால் நூற்றாண்டு காலம் பதவியில் இருந்து விட்டேன்; பெரிய உயரத்திற்கும் சென்று இருக்கிறேன்; பெரிய பள்ளத்திற்கும் சென்று வந்திருக்கிறேன். இந்த ஆட்சியில் நடக்கும் அயோக்கியத்தனம் அவலம் போல இதுவரை இல்லை” என்றார்.