மேலும் அறிய

Ilaiyaraja: இளையராஜா சென்ற கோயிலில் நடந்தது இதுதான்! அறநிலையத்துறை விளக்கம்!

இந்து அறநிலைத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள விளக்கக் கடிதத்தில் என்ன சொல்லியுள்ளார் தெரியுமா முழுமையாக படிக்கவும்.

இளையராஜா ஒப்புக் கொண்டு  தான் அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து, சுவாமி தரிசனம் செய்தார். என, இந்து அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் விருதநகர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்.
 
இளையராஜா சாமி தரிசனம் சர்ச்சை
 
இசைஞானி இளையராஜா நேற்று முன் தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றார்.  இளையராஜா கோயிலுக்குள் வருகை தந்து ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய கருவறைக்குள் நுழைந்தார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்குமாறு கூறினார்கள். இதனால் சற்று யோசித்த இளையராஜா சாமி இருக்கும் கருவறையில் இருந்து வெளியே வந்து சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இளையராஜா கோயிலுக்குள் அவமானப்படுத்தப்பட்டதாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இளையராஜா விளக்கம்
 
இளையராஜா இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக இந்து அறநிலைத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள விளக்கக் கடிதத்தில் 
 
அறநிலைத்துறை இணை ஆணையர்
 
”விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு , 15.12.2024 அன்று இத்திருக்கோயிலுக்கு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் சுவாமி
தரிசனத்திற்கு திருக்கோயிலுக்கு வருகை புரிந்தனர் என்றும், இத்திருக்கோயிலில் ஆண்டாள் ரெங்கமன்னார். கருடாழ்வார், மூலவர் கருவறையிலும், கருவறையினை அடுத்த அர்த்த மண்டத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார். கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர். எனவே. இத்திருக்கோயில் மரபு படியும். பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர். பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் வழக்கமில்லை என்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். 
 
15.12.2024 அன்று இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் வருகை புரிந்த போது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் கூறிய உடன் அவரும். ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார் என்றும். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”  என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget