மேலும் அறிய
விருதுநகர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்.. தவறவிடாதீர்கள் மக்கா !
புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வாக்கு
விருதுநகர் மாவட்டம் வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது - மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா,தகவல்.
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளிலும், அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும். 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக் கொண்டு சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும். மேலும், வாக்காளர்கள் இணையவழியாகவும் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci. gov.in/ என்ற இணையதளம் மற்றும் “Voters Help Line” என்ற கைபேசி செயலி மூலம் விண்ணப்பம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண் 044-1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிந்துக்கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளிலும், அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும். 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக் கொண்டு சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும். மேலும், வாக்காளர்கள் இணையவழியாகவும் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.
வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள்
மேற்படி இணையவழியில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை 19.12.2025 (வெள்ளி) முதல் 18.01.2026 (ஞாயிறு) வரை வரை வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலங்களிலும் அளிக்கலாம். மேலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிறுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிறுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

அடையாள அட்டை பெற விரும்புபவர்கள்
இம்முகாம்களில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். எனவே, பொது மக்கள் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை வாக்குச்சாவடி மையங்களிலும், தேர்தல் பதிவு அலுவலகத்திலும், இணையவழியாகவும் சரிபார்த்துக் கொள்ளவும், புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement