மேலும் அறிய
உணவு கலப்படம் பற்றிய கவலை இனி வேண்டாம்! இனி இந்த ஒரு வாகனம் போதும்..!
நுகர்வோர்கள் தமது வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களின் தரம் குறித்து அறிய உணவு மாதிரி கொடுத்து, அந்த இடத்திலேயே பகுப்பாய்வறிக்கையைப் பெற்றுக்கொள்ளலாம்.

நடமாடும் உணவு பாதுகாப்பு வாகனம்
Source : whats app
உணவகங்களில் உணவு வகைகள் கலப்படமின்றி தயாரிக்கப்படுகின்றனவா, கடைகளில் விற்கப்படும் உணவு பண்டங்கள் தரமாக உள்ளனவா என்று எளிமையாக தெரிந்துகொள்ள இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் உதவும்.
உணவு பகுப்பாய்வு நடமாடும் வாகனம்
கொரோனா பெருந்தொற்று வந்ததற்கு பின் உணவுத் தொழில் மிகப்பெரும் வளர்ச்சியடைந்துவிட்டது. குறிப்பாக சாலையோரக் கடைகள் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இந்த சூழலில் உணவுகள் தரமானதா? இல்லை உடல் உபாதைகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகமும் மக்களிடம் ஒரு அச்சமாக உள்ளது. இந்த சூழலில் இதனை உறுதி செய்து கொள்ளும் வகையில் நடமாடும் வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், “உணவுகளின் தரம் குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், உணவகங்களில் உணவு வகைகள் கலப்படமின்றி தயாரிக்கப்படுகின்றனவா, கடைகளில் விற்கப்படும் உணவு பண்டங்கள் தரமாக உள்ளனவா என்பன குறித்து நேரில் கண்டறிவதற்காக, நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், இந்த நடமாடும் பகுப்பாய்வுக்கூடம், ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறைகள் தவிர்த்து, மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களுக்கும், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு பயணம் செய்யும்.

உணவு வணிகர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அப்போது, நுகர்வோர்கள் தமது வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களின் தரம் குறித்து அறிய உணவு மாதிரி கொடுத்து, அந்த இடத்திலேயே பகுப்பாய்வறிக்கையைப் பெற்றுக்கொள்ளலாம். உணவு வணிகர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், பள்ளி, கல்லூரிகளில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளது. எனவே, பொது மக்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை செய்வோர் தங்கள் பகுதிக்கு இந்த வாகனம் வரும் போது, உணவுப் பொருட்கள் தொடர்பான தங்களின் சந்தேகங்களைக் கேட்டும், பரிசோதித்தும் பயன்பெறலாம்” என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு