விருதுநகரில் 10 புதிய பேருந்துகள் சேவை துவக்கம்.. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியீடு!
10 வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளின் சேவைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.

விருதுநகர் மண்டலத்தில் 10 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
புதியதாக வாங்கப்பட்ட 10 நகர் பேருந்துகள்
விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 10 நகர் பேருந்துகளின் சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, தலைமையில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்
10 வழித்தடங்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் பேருந்து வழித்தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது 9 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது 10 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் - ஒண்டிப்புலி வழித்தடம், விருதுநகர் – பேரையூர் வழித்தடம், சாத்தூர் - நாருகாபுரம் வழித்தடம், சாத்தூர் - திருத்தங்கல் வழித்தடம், அருப்புக்கோட்டை - உடையநாதபுரம் வழித்தடம், அருப்புக்கோட்டை – பி.தொட்டியான்குளம் வழித்தடம், திருவில்லிபுத்தூர் – இராஜபாளையம் - திருவில்லிபுத்தூர் - சிவகாசி வழித்தடம், இராஜபாளையம் – திருவில்லிபுத்தூர் – கான்சாபுரம் வழித்தடம், இராஜபாளையம் – திருவேங்கடம் - இராஜபாளையம் – மாங்குடி வழித்தடம், காரியாபட்டி – திருவளநல்லூர் – காரியாபட்டி - அருப்புக்கோட்டை வழித்தடம் ஆகிய 10 வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளின் சேவைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.





















