வெளுத்து வாங்கும் மழையால் வைகை அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்வு - வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
தேனியில் வெளுத்து வாங்கும் மழையால் வைகை அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்வு. அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் அருகே ஆண்டிபட்டி வைகை அணை 70 அடியை எட்டியது. 70.50 அடியை எட்டும் போது அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தேனி திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வைகை ஆற்றங்கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Crime: ”230 கி.மீ பயணம்"... மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்... சந்தேகத்தால் வெறிச்செயல்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் சில தினங்களாக அவ்வப்போது மழை விடாமல் பெய்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் மற்றும் ஆண்டிபட்டி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தேனி ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மதுரை, தேனி குடிநீர் தேவைக்கும், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாய தேவைக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.
Diwali Rasi Palan: 2023 தீபாவளி தினத்தில் இருந்து 2024 தீபாவளி வரை எந்தெந்த ராசிகளுக்கு என்ன பலன் ?
வடகிழக்கு பருவ மழையால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ள நிலையில் இன்று இரவுக்குள் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கும் என்பதால், எப்போது வேண்டுமானாலும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இதனால் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணி துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.