Crime: ”230 கி.மீ பயணம்"... மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்... சந்தேகத்தால் வெறிச்செயல்!
சந்தேகத்தால் மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: சந்தேகத்தால் மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை கொன்ற கணவர்:
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீபா (24). இவர் பொறியியல் பட்டதாரியான இவர் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிஷோர் என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார். கிஷோர் காவல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதி சாமராஜநகர் மாவட்டத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், பெண் பிரதீபா கர்ப்பமாக இருந்ததால், தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. மனைவி பிரதீபா மீது கணவர் கிஷோருக்கு சந்தேகம் இருந்ததாக தெரிகிறது. இதனால் மனைவி பிரதீபாவிடம் பலமுறை சண்டையிட்டுள்ளார். பெண் பிரதீபா கர்ப்பமாக இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அப்போதும் கூட, கிஷோர் அவரை தொடர்பு கொண்டு சண்டை போட்டுள்ளார். அவரது கல்லூரி ஆண் நண்பர்களுடன் பேசுவதாக சந்தேகப்பட்டு, சண்டை போட்டிருக்கிறார். இப்படி சில நாட்கள் சென்று கொண்டிருக்கையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை பெரிய பிரச்சனையாக வெடித்தது.
சந்தேகத்தால் வெறிச்செயல்:
இதனை அடுத்து, பிரதீபாவை தொடர்பு கொண்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் பிரதீபா அழுதிருக்கிறார். இதனால், தொலைப்பேசி அழைப்பை துண்டித்து விட்டு, கிஷோருடன் பேசமால் இருக்கும்படி பிரதீபாவின் தாயார் கூறியிருக்கிறார். கடந்த திங்கட்கிழமை மொபைல் போனை பிரதீபா பார்த்தபோது, அதில் 150 மிஸ்டு கால்கள் கிடந்துள்ளன.
இதனை அடுத்து, 230 கிலோ மீட்டர் பயணம் செய்து மனைவி வீட்டிற்கு வந்த கிஷோர், அறை ஒன்றை பூட்டிவிட்டு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் நீடித்த நிலையில், மனைவி பிரதீபாவை கொலை செய்துள்ளார் கிஷோர். பின்னர், அங்கு வந்த பிரதீபாவின் தாய் கதவை தட்டியிக்கிறார். இதன்பின், கதவை திறந்த கிஷோர், அவரது தாயிடம் பிரதீபாவை கொலை செய்துவிட்டேன் என்று கூறிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த பிரதீபா தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், மனைவிக்கு மற்றொரு நபருடன் தொடர்பு உள்ளது என் கிஷோர் சந்தேகித்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், பிரதீபாவை கொலை செய்வதற்கு முன், விஷம் குடித்து தற்கொலை செய்ய கிஷோர் முயன்றுள்ளார். இவருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க