மேலும் அறிய

Diwali Rasi Palan: 2023 தீபாவளி தினத்தில் இருந்து 2024 தீபாவளி வரை எந்தெந்த ராசிகளுக்கு என்ன பலன் ?

Deepavali Rasi Palan 2023: 2023  தீபாவளி தினத்தில் இருந்து 2024 தீபாவளி வரை  எந்தெந்த ராசிகளுக்கு என்ன பலன் ?

மேஷ ராசி

  90%  பணவரவு தாராளம் 

அன்பான ABP நாடு வாசகர்களுக்கு,,  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,  ஒரு மனிதன் தன்னுடைய  கர்மாவுக்கு ஏற்றார் போல்  வாழ்க்கையில் பாவம் புண்ணியங்களை அனுபவிக்கிறான்.   குழந்தை பிறக்கும் போதே,  அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை எழுதப்பட்டு விட்டது.  அப்படி என்றால் ஜோதிடர்கள் கூறுகிறார்கள்  உங்களுக்கு அடுத்த வருடம் குரு பலம் வந்துவிடும் , அதிலிருந்து வாழ்க்கை செழிப்பாக மாறப்போகிறது என்று,  இது எப்படி எடுத்துக் கொள்வது?  என்றெல்லாம்  பல யோசனைகள் நம்மில் பலருக்கு உண்டு.  எத்தனை  பெயர்ச்சி  வந்தாலும்  ஜாதகத்தில் இருப்பவை மட்டுமே நடக்கும் . அதற்கு கோச்சாரத்தில் வரும் ராகுவோ, கேதுவோ,  குரு,  சனியோ துணை புரியும். 

நேரடியாக மேஷ ராசியின் பலன்களுக்கு செல்லலாம்.  செப்டம்பர் மாதம் வரை நன்றாக இருந்தது .  தற்போது எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.  மிகக் கடுமையான  அலைச்சலில்  இருக்கிறேன். முடியும் என்று எண்ணியிருந்த காரியம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.  

  தொழிலுக்காக நான் போட்ட முதலீட்டில் பெரும் நஷ்டத்தை சந்தித்து விட்டேன்.  நடக்கும் என்று இருந்தது நடக்கவில்லை.  விரயம் தான் மிச்சம்.  இன்று பெரும்பாலான மேஷ ராசி வாசகர்கள் புலம்பியதை நான் கேட்டிருக்கிறேன்.  கவலை வேண்டாம் இது தற்காலிகமான புலம்பல் தான்.  தீபாவளிக்கு பிறகு வரக்கூடிய  டிசம்பர் 30ஆம் தேதி அன்று  குரு வக்ர நிவர்த்தி அடைகிறார்,  நீங்கள் எதை இழந்தீர்களோ  அதை இரட்டிப்பாக  பெற போகிறீர்கள். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.  விரயங்கள் சுப விரயங்களாக மாறப் போகிறது. திருமணம் கைகூடி வரும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று கூறுவீர்கள் . புத்திர பாக்கியம் கிடைக்கும்.

 குரு வக்ர நிவர்த்தி : 

 மேஷ ராசிக்கு 9 ஆம் வீட்டு  அதிபதியும்  பன்னிரண்டாம் வீட்டு அதிபதியும் குரு தான்.  அப்படிப்பட்ட குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ஆம் இடத்தில் வக்கிரம் பெற்று செல்வதால்  பெருத்த நஷ்டத்தையும்  குடும்பம் ஒற்றுமையின்மையும் சுட்டிக் காட்டி இருக்கும்.  குரு வக்ர நிவர்த்திக்கு பிறகு  அதாவது டிசம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு  வாழ்க்கையே மாறப்போகிறது.  நினைத்த காரியத்தில் ஜெயம்.  கையில் இருந்த சேமிப்பு பணம்  கரைந்து மீண்டும் கைக்கே திரும்பி வரும். 

 "ராகு - கேது"வின்  மகிமைகள் :

 உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் கேது  12-ஆம் இடத்தில் ராகு.  மேஷ ராசிக்கு  அற்புதமான இடம்.  மலையளவு கடன் இருக்கிறதே என்ன செய்யப் போகிறோம் என்று  தினமும் கடனைப் பற்றி சிந்தித்து சிந்தித்து  மனதளவில் பாதிக்கப்பட்ட உங்களுக்கு  ஒரு பொன்னான காலகட்டம்  ஆறாம் இடத்துக்கு எது கடன்களை அடையச் செய்வார்.  12ஆம் இடத்தில் ராகு விரயத்தை குறைப்பார்.  சுப விரயமாக மாற்றுவார்.

 மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் : 

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு  வருவதால்,  பணத்தை சம்பாதிக்கும் ஆற்றல் பெருகப் போகிறது  குடும்பத்தாரை விட்டு தள்ளி இருந்தவர்கள் அனைவரும்  குடும்பத்தோடு இணையப் போகிறார்கள்  ஒற்றுமையான குடும்ப வாழ்க்கை அமையும்   பண வளம் உண்டு பணம் சேரும்.  தம்பதியர்களுக்குள் ஒற்றுமை ஓங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.  தொழிலில் முன்னேற்றம் அடையப் போகிறீர்கள். எதிலும் வெற்றி வெற்றி.

அதிர்ஷ்டமான எண் : 6, 4

அதிர்ஷ்டமான நிறம் :  கிளி பச்சை 

வணங்க வேண்டிய தெய்வம் :  முருகன் 


 ரிஷப ராசி   

பொருளாதார முன்னேற்றம் ஏற்பட போகிறது !!!

அன்பார்ந்த, ABP நாடு ரிஷப ராசி வாசகர்கள, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 2023 முடிவதற்குள்ளாகவே  குரு லாப ஸ்தானத்தில் பயணிக்கிறார்.  ராகுவும்  லாபஸ்தானத்திலேயே இருக்கிறார்.  எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய சக்தி உங்களுக்கு உண்டு.  வயதாகிக் கொண்டே போகிறது திருமணம் கைகூடி வரவில்லை என்று ஏக்கத்துடன் காத்திருந்த உங்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி,  லக்னத்திற்கு வரும் குரு பகவான் உங்களின் ஏழாம் வீட்டை பார்ப்பதால் நிச்சயமாக திருமணம் உண்டு.  லக்னத்தில் இருக்கும் குருவால் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் வந்தாலும்  அவை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது.  ஐந்தாம் இடத்தில் கேது இருப்பதால்  புத்திர பாக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் வகையில் கொஞ்சம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.  வேலை அதிகமாக இருக்கிறது என்று பிள்ளைகளை கவனிக்காமல் இருந்து விடாதீர்கள்.  லாபத்தில் இருக்கும் ராகுவால்  கோடீஸ்வர யோகம் உண்டாகப் போகிறது.

11- ஆம் அதிபதி  குரு லக்னத்தில் :

தொழிலில் பெரிதாக முதலீடு செய்து விட்டேன் ஆனால்  கொஞ்சம் கூட லாபமே வரவில்லை என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்த உங்களுக்கு  பதினொன்றாம் அதிபதியான குரு லக்னத்திலேயே அமர்வதால்  போட்ட முதலீட்டில் இரட்டிப்பு லாபம்  உங்களைத் தேடி வர போகிறது. 11- ஆம் அதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான குரு  உங்களுக்கு யோகத்தை வழங்க காத்திருக்கிறார்.  எட்டாம் இடம் என்பது அடுத்தவர் பணம்,  பதினொன்றாம் இடம் என்பது நீங்கள் தாராளமாக சம்பாதிக்கும் பணம், எனவே உங்களின் பண வரவு பொருளாதார முன்னேற்றம்  சிறப்பாக அமையும் . 

 ராகுவுக்கு வீடு கொடுத்த குரு லக்னத்தில் :

 மீன ராசியில் அமர்ந்திருக்கும் லாப ராகுவை,  ரிஷப ராசியான உங்கள் லக்னத்தில் அமரப்போகும் " குரு" அற்புதமாக கட்டுப்படுத்துவார்.  வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தாலும்  அவை உங்களுக்கு சாதகமாகவே அமையும்.  போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளின் பியூகங்களை எளிதாக முறியடிக்கலாம்.  உங்களை ஏதாவது செய்து  தரைமட்டமாக்க வேண்டும் என்று  நினைத்த எதிரிகளின் எண்ணங்களை  நீங்கள் பொசுக்க  போகிறீர்கள். 

 மிதுன ராசி 

பொறுத்தால் வெற்றி நிச்சயம் !!!

அன்பார்ந்த ABP நாடு மிதுன ராசி வாசகர்களே,  உங்கள் ராசிக்கு  ஜனவரி மாதம் முதல் லாப ஸ்தானத்தில் பயணிக்கும் குருவால்  எதிலும் ஏற்றமான சூழ்நிலை காணப்பட போகிறது.  திருமணத்திற்காக காத்திருந்த உங்களுக்கு நல்ல செய்தி வீடு தேடி வரும்.  எத்தனையோ மருத்துவர்கள் பார்த்துவிட்டேன்  ஆனால் குழந்தை வரம் இல்லை என்று  ஏங்கித் தவிக்கும் உங்களுக்கு  மழலைச் செல்வத்தின் குரல் கேட்கப் போகிறது.  ஐந்தாம் இடத்தில் கேது இருந்து  புத்திர பாக்கியத்தை தடை செய்து வந்துள்ளார்  தற்போது அவர் அங்கிருந்து விலகி  உங்களுக்கான  குழந்தை பாக்கிய வரத்தை  அருளச் செய்யப் போகிறார்.  பத்தாமிடத்தில் ராகு,  ஒரு தொழிலுக்கு இரண்டு தொழில் பார்ப்பீர்கள்  அவை அனைத்தும் லாபகரமாகவே முடியும்.    மகனுக்கு / மகளுக்கு திருமணம் நடக்கவில்லையே என்று  ஏங்கியிருந்த   உங்களின் கனவு  பலிக்கப் போகிறது. 

வீடு /  வாகனத்தில் கவனம் தேவை :

 நான்காம் இடத்துக்கு  கேது பகவான்  உங்களின் வாகனத்தை பழுதாக்குவார். இடம் வீடு தொடர்பான காரியங்களில்  சிக்கல்களை ஏற்படுத்துவார்.  நிம்மதியான உறக்கம் என்பது  சற்று குறைவாகவே இருக்கும்.  இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். 

 பரிகாரம் : 9  வாரங்களுக்கு  விநாயகர் கோவில் சென்று  நல்லெண்ணெய்  தீபம் போட வேண்டும் 

சுப விரயங்கள்  கண்டிப்பாக உங்களுக்கு ஏற்படும்.  வீடு கட்டுதல்,  திருமண காரியங்கள்,  காதுகுத்து, புதுமனை புகுவிழா, வாகனம் வாங்குதல்,  பழைய வீட்டை புதுப்பித்தல்  போன்ற  சுப காரியங்களுக்கு பணவிரயம் ஏற்படும்.  அலைச்சல் மிகுதியாக இருந்தாலும் ஆதாயம் உண்டு.  வேலை விஷயமாக  சொந்த ஊரிலிருந்து,  வெளியூருக்கு செல்ல வேண்டி வரும்.  பத்தில் ராகு இருப்பதால்  புதிய தொழில்  தொடங்கும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது.  யாரையும் நம்பி  எதிலும் முதலீடு செய்ய வேண்டாம்.  மற்றவர்களுக்கு  ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும்.  திருப்தியான தொழில் அமையவில்லையே என்று  கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு,  வேலை மாற்றம் உண்டு.   இருக்கும் வேலையை விட்டு,  வேறு வேலைக்கு செல்ல வேண்டாம்.  கால பைரவர் வழிபாடு  உங்களுக்கு நல்ல வழியை காண்பிக்கும்.

 அதிர்ஷ்டமான  எண்கள் : 3, 5

 அதிர்ஷ்டமான நிறம் :  ஆரஞ்சு 

வணங்க வேண்டிய தெய்வம் :  கால பைரவர் 


 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
Netanyahu Spoke to Modi: போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
Air India Black Box: சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Driving

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
Netanyahu Spoke to Modi: போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
Air India Black Box: சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
Annamalai's Plan: கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
வெளியானது 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்?- வழிமுறைகள் இதோ!
வெளியானது 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்?- வழிமுறைகள் இதோ!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. இதோ கடைசி வாய்ப்பு- டிஎன்பிஎஸ்சி அழைப்பு
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. இதோ கடைசி வாய்ப்பு- டிஎன்பிஎஸ்சி அழைப்பு
NEET Cut Off Marks 2025: நாளை வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்; யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் தேவை?
NEET Cut Off Marks 2025: நாளை வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்; யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் தேவை?
Embed widget