மேலும் அறிய

பள்ளியில் சிறார்களுக்கான தடுப்பூசி எப்போது போடப்படும் - அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்

வீடுகளில் அவசியம் இல்லாமல் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்துவது, கொசுக்கள் பெருகுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் மேற்கொண்டு வருகிறோம்.

மதுரையில் அரசு நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் குரங்கம்மை பரிசோதனைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்துவிட்டு. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது அவர் பேசுகையில், “குரங்கம்மை பரவல் குறித்த ஆய்வு முதல்வர் வலியுறுத்தலின் அடிப்படையில் பன்னாட்டு விமானங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கேற்ப தமிழகத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் முதல் பாதிப்பு ஏற்பட்டபோதே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்தும் பயணிகளுக்கு அவர் முகத்திலோ அல்லது முழங்கைக்கு அடியிலோ ஏதாவது கொப்பளங்கள் போன்ற அறிவுரைகள் இருக்கிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
 
பள்ளியில் சிறார்களுக்கான தடுப்பூசி எப்போது போடப்படும் - அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்
அதோடு மட்டுமல்லாமல் ஐ.சி.எம்.ஆர் விதிகளின்படி வெளிநாடுகளில் இருந்து வருகிற அத்தனை பயணிகளையும் மாஸ் ஃபீவர் ஸ்கிரீனிங் கேம்ப் என்கிற அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் ரேண்டமாக இரண்டு சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குரங்கம்மை பல்வேறு நாடுகளில் கூடிக் கொண்டிருக்கிறது கடந்த வாரம் 63 நாடுகளில் இருந்து இந்த வாரம் 72 நாடுகளில் அதற்கான பாதிப்பு கூடுதலாகி உள்ளது.

பள்ளியில் சிறார்களுக்கான தடுப்பூசி எப்போது போடப்படும் - அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்
 
உலகம் முழுவதிலும் இந்த 72 நாடுகளில் 14 ஆயிரத்து 533 பேருக்கு பாதிப்பு கூடுதலாக இருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை கேரளா, டெல்லி, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அதற்கான பாதிப்பு கூடுதலாகி உள்ளது. எனவே தமிழகத்தில் பன்னாட்டு விமான நிலையங்களை தொடர்ந்து கண்காணிப்பதும், கேரளா, ஆந்திரா எல்லைகளை கண்காணிப்பதும் தொடர்ந்து எல்லைப் பகுதியில் இருந்து வருபவர்களை ஸ்டேச்சுரேஷன் பரிசோதனை செய்து கண்காணிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் நானும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சுகாதாரத்துறையை சார்ந்தவர்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளை கண்காணிப்பதாக இருந்தாலும். மாஸ் ஃபீவர் ஸ்கிரீனிங் கேம்பாக மேற்கொண்டு வருகின்றனர். இங்கு தினந்தோறும் மூன்று வெளிநாட்டு விமானங்கள் வருகிறது அதில் ஒவ்வொரு நாளும் 300 முதல் 400 வரை பயணிகள் வருகிறார்கள் அவர்களுக்கு ரேண்டமாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை இரண்டு சதவீதம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
 
பள்ளியில் சிறார்களுக்கான தடுப்பூசி எப்போது போடப்படும் - அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்
 
அடுத்து வரவிருக்கும் மழைக்காலத்திற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு
 
அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு துறையோடு இணைந்து டெங்கு, மலேரியா போன்ற நோய்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடுகளில் அவசியம் இல்லாமல் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்துவது, கொசுக்கள் பெருகுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் மேற்கொண்டு வருகிறோம். லார்வா நிலையிலேயே கொசுக்களை ஒழிப்பதற்கு கம்பூச்சியா போன்ற மீன்கள் பயன்படுத்தப்படுகிறது.

பள்ளியில் சிறார்களுக்கான தடுப்பூசி எப்போது போடப்படும் - அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்
 
சிறார்களுக்கான தடுப்பூசி குறித்த கேள்விக்கு
 
சிறார்களுக்கான தடுப்பூசி குறித்து ஒன்றிய அரசு எப்போது அறிவுறுத்துகிறார்களோ அப்போது உடனடியாக பள்ளிகளில் போடப்படும். 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி தனியார் நிறுவனத்தில் கட்டணம் செலுத்தி போட வேண்டிய சூழ்நிலையை மாற்றி முதல்வரின் வேண்டுகோளை ஏற்று 75 நாட்களுக்கு இலவசமாக அந்த தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
குரங்கம்மைக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி குறித்த கேள்விக்கு
 
WHO, ஐசிஎம்ஆர் போன்ற அமைப்புகள் இந்த நோய்க்கான தீர்வை அறிவுறுத்துகிறார்களோ அப்போது மட்டுமே செய்யப்படும். இப்போது 15 இடங்களில் ஆய்வகங்கள் அமைப்பதற்கு ஒன்றிய அரசு பரிசீலிக்கிறது தமிழகத்தில் சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஒரு ஆய்வகம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நாம் எடுத்துள்ளோம் அதை அவர்கள் ஏற்பார்கள் என்று நம்புகிறோம் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: கடலூரில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: கடலூரில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: கடலூரில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: கடலூரில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Embed widget