மேலும் அறிய
Advertisement
நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: தேனியில் உள்ள 6 நகராட்சிகளில் 3,36,633 வாக்காளர்கள்
6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 6 நகராட்சிகளில் 1,63,542 ஆண் வாக்காளர்கள், 1,72,993 பெண் வாக்காளர்கள், 98 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 3,36,633 வாக்காளர்கள் உள்ளனர். 22 பேரூராட்சிகளில் மொத்தம் 1,36,127 ஆண் வாக்காளர்கள், 1,42,183 பெண் வாக்காளர்கள், 31 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,78,341 வாக்காளர்கள் உள்ளனர்.
அதுபோல், பேரூராட்சி வாரியாக ஆண்டிப்பட்டியில் 26,479 பேர், பி.மீனாட்சிபுரத்தில் 7,390 பேர், பூதிப்புரத்தில் 9,530 பேர், தேவதானப்பட்டியில் 16,097 பேர், கெங்குவார்பட்டியில் 10,275 பேர், அனுமந்தன்பட்டியில் 9,841 பேர், ஹைவேவிசில் 3,959 பேர், காமயகவுண்டன்பட்டியில் 15,212, கோம்பையில் 14,618 பேர், குச்சனூரில் 6,181 பேர், மார்க்கையன்கோட்டையில் 5,415 பேர், மேலச்சொக்கநாதபுரத்தில் 13,776 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
ஓடைப்பட்டியில் 13,6278 பேர், பழனிசெட்டிபட்டியில் 13,751 பேர், பண்ணைப்புரத்தில் 8,759 பேர், புதுப்பட்டியில் 10,701 பேர், தாமரைக்குளத்தில் 10,129 பேர், தென்கரையில் 12,788 பேர், தேவாரத்தில் 14,622 பேர், உத்தமபாளையத்தில் 28,060 பேர், வடுகபட்டியில் 11,953 பேர், வீரபாண்டியில் 15,178 பேர் வாக்காளர்களாக உள்ளனர். வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion