மேலும் அறிய
Advertisement
Lok Sabha Elections 2024: உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு அழைத்தாரா? நடிகர் சூரி பரபரப்பு பேட்டி!
மக்களவைத் தேர்தலுக்கு உதயநிதி ஸ்டாலின் தன்னை பிரச்சாரத்துக்கு அழைத்தாரா? என்பதற்கு நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்முறை வாக்காளர்கள் கன்னிச்சாமி போல வாக்கை கணித்து முறையாக செலுத்த வேண்டும் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல்
2024ஆம் ஆண்டு நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன. கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் காங்கிரஸ் கட்சி மட்டும் இதுவரை வேட்பாளர்களை அறிப்பில் தொய்வு ஏற்பட்டு அறிவிக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் திருமண நிகழ்ச்சியில் நடிகர் சூரி
பாஜகவை சேர்ந்த சசிக்குமார் இல்ல திருமண நிகழ்ச்சியி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் நடிகர் சூரி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து மேடையில் இருந்த சுப்ரமணியசாமியோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முதல்முறை வாக்காளர்கள்:
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நடிகர் சூரி பேசுகையில், ”முதல்முறை வாக்காளர்கள் கன்னிச்சாமி போல. கன்னி வாக்கை செலுத்த தயாராக உள்ளனர். கண்டிப்பாக அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். நமது வாக்கு சாதாரணமானது அல்ல. ஒவ்வொருவரும் செலுத்தும் வாக்கு நாட்டின் வளர்ச்சிக்கான வாக்காக இருக்க வேண்டும். நமது வாக்கை யாருக்கு செலுத்த வேண்டுமோ அதை கணித்து வாக்கை செலுத்த வேண்டும். கருடன் படம் பணிகள் முடிந்துவிட்டது.
உதயநிதி ஸ்டாலின் அழைக்கவில்லை:
விடுதலைக்கு முன்பு கருடன் படம் வெளியாகும். தென்மாவட்டங்களில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளேன். உதயநிதி ஸ்டாலின் என்னை பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை. நான் படப்பிடிப்பில் பிசியாக உள்ளேன் என அவருக்கு தெரியும். இது நல்ல தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன். நல்லதாகவே நடக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தால் மகிழ்ச்சி தான் என தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ABP premium story Premium AIADMK MP Jayavardhan: தமிழச்சி தங்கபாண்டியன் என்ன செஞ்சாங்க? தென் சென்னை மக்கள் மனநிலை இதுதான் - அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சிறப்புப் பேட்டி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - சூடுபிடிக்கும் தேர்தல்: தி.நகரில் ரூ.5.27 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்; தேர்தல் கண்காணிப்பு குழு அதிரடி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion