மேலும் அறிய
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; இரண்டு பெண்கள் உயிரிழந்த சோகம்
தொடர்ந்து சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதியில் வெடி விபத்து ஏற்படுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெடி விபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக வெம்பக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் லைசென்ஸ் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு வெம்பக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.#sivakasi | #viruthunagar | #tamilnadu | @LPRABHAKARANPR3 @SRajaJourno | #abpnadu pic.twitter.com/BT10qXBJhA
— arunchinna (@arunreporter92) July 25, 2023
இந்நிலையில் கேப் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ரசாயன கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்ட மன்குண்டாம் பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி மற்றும் பானு என்ற இரு பெண்கள் உயிரிழந்தனர்.

தகவல் தெரிந்துவந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து, உயிரிழந்த இருவர் உடலையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். வெம்பக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதியில் வெடி விபத்து ஏற்படுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Abp Nadu Exclusive: சிவகங்கை சிறையில் 35 ஏக்கரில் இயற்கை விவசாயம்.. சந்தைப் படுத்த தனி யுக்தி.. அசத்தும் சிறைத்துறை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















