மேலும் அறிய

பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செயல்பட்ட விலையில்லா விருந்தகம் மதுரை மாநகராட்சியால் அகற்றப்பட்டுள்ளது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செயல்பட்ட விலையில்லா விருந்தகம் மாநகராட்சியால் அகற்றப்பட்டுள்ளது கட்சி தொண்டர்களை அதிச்சியில் ஆழ்தியுள்ளது.

மதுரையில் சுமார் 150 நாட்களாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செயல்பட்ட விலையில்லா விருந்தகம்  செயல்பட்டு கொண்டிருந்தது. இப்போது அவை மதுரை மாநகராட்சியால் மூடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் மாநில மாநாட்டுக்கு பிறகு தமிழக வெற்றிக் கலத்திற்கு இது போன்ற நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாக நிர்வாகிகள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 

விஜய், தான் அரசியலுக்கு வருவதன் காரணம்? தன்னுடைய அரசியல் எதிரி யார்? தன்னுடைய நிலைப்பாடு என்ன? என்று அக்கட்சியின் முதல் மாநில மாநாட்டில் விளக்கமாக கூறினார். பா.ஜ.க.விற்கும், தி.மு.க.விற்கும் எதிராக தான் அரசியலை முன்னெடுக்கப் போவதாகவும் மக்களின் நலனை முதன்மையாக கொண்டு செயல்பட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேடையில் விஜய் பேசியது உணர்ச்சிவசமாகவும் அதே நேரம் ரசிகர்களை கவரும் விதமாக நகைச்சுவையாகவும் இருந்ததாக பலரும் விமர்சனம் செய்தனர்.  ஒரு சில நேரங்களில் திரைப்பட வசனங்களைப் போல் விஜய் மூச்சுவிடாமல் பேசியதை பலரும் சுட்டிக்காட்சி சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்தனர். இந்தநிலையில் முதல் மாநில மாநாட்டுக்கு பிறகு தமிழக வெற்றிக் கலத்திற்கு இது போன்ற நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாக நிர்வாகிகள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 

மதுரை விலை இல்லா விருந்தகம்:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தொடங்கி வைத்த விலை இல்லா விருந்தகம் மூலம் பல மாவட்டங்களில் கட்சியின் சார்பாக உணவு வழங்கப் பட்டு வருகிறது. மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக விலையில்லா விருந்தகம் மதுரை மத்திய தொகுதி நிர்வாகி சிராஜுதீன் தலைமையில் நாள் ஒன்றுக்கு சுமார் 250க்கும் மேற்பட்ட ஏழை ,எளிய, மக்களுக்கு  உணவு வழக்கப்படுவதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். 
 
மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நேதாஜி ரோடு பகுதியில் மத்திய தொகுதி நிர்வாகிகள் இந்த தினசரி விலையில்லா விருந்தகம் மூலம் ஏழை எளிய மற்றும் நலிவுற்ற மக்களுக்கு உணவு வழங்கி வந்தனர். இந்த நிலையில் இந்த விருந்தகம் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்றைய தினம் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.   

இதனால் குழப்பம் அடைந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் வழக்கம் போல் இன்று மதிய உணவிற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனை அறிந்த நிர்வாகிகள் உடனடியாக உணவு தயார் செய்து தற்காலிக பந்தல் அமைத்து உணவு விநியோகம் செய்தனர். தமிழக வெற்றிக் கலத்திற்கு இது போன்ற நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாக நிர்வாகிகள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதோடு, ஆளுங்கட்சியினர் த.வெ.க.வின் செயல்பாடுகளை கண்டு அச்சம் கொள்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரிடம் கேட்டபோது “தவெகவினர் உணவு வழங்குவது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதால்,  உணவகத்தை அகற்ற வேண்டும் என்று காவல்துறையினர் மாநகராட்சி நிர்வாகத்தினரை கேட்டுக்கொண்டனர். அதனால்தான் அந்த பூத் அகற்றப்பட்டது. உணவு வழங்க காவல்துறையினர் உரிய அனுமதி அளித்தால் மாநகராட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்றார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
Breaking News LIVE 12th Nov : வீட்டிற்கு செல்ல அவசரப்படாதீங்க; காத்திருந்து போங்க - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
Breaking News LIVE 12th Nov : வீட்டிற்கு செல்ல அவசரப்படாதீங்க; காத்திருந்து போங்க - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர், போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள் ; அல்லல்படும் நோயாளிகள்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர், போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள் ; அல்லல்படும் நோயாளிகள்
திமுகவினருக்கு பெருஞ்சோகம்.. உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏ.. அதிர்ச்சியில்  தொண்டர்கள்
திமுகவினருக்கு பெருஞ்சோகம்.. உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏ.. அதிர்ச்சியில் தொண்டர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS mobile missing : ஓபிஎஸ்-க்கு இந்த நிலையா? மணிக்கணக்கில் WAITING! AIRPORT-ல் நடந்தது என்ன?S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!RB Udhayakumar : EPS-ஐ நெருக்கும் EX அமைச்சர்கள்! குறுக்கே வரும் RB உதயகுமார்! OPS-க்கு ஆப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
Breaking News LIVE 12th Nov : வீட்டிற்கு செல்ல அவசரப்படாதீங்க; காத்திருந்து போங்க - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
Breaking News LIVE 12th Nov : வீட்டிற்கு செல்ல அவசரப்படாதீங்க; காத்திருந்து போங்க - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர், போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள் ; அல்லல்படும் நோயாளிகள்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர், போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள் ; அல்லல்படும் நோயாளிகள்
திமுகவினருக்கு பெருஞ்சோகம்.. உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏ.. அதிர்ச்சியில்  தொண்டர்கள்
திமுகவினருக்கு பெருஞ்சோகம்.. உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏ.. அதிர்ச்சியில் தொண்டர்கள்
”அசைன்மெண்ட் NTK - உளவுத்துறைக்கு கொடுக்கப்பட்ட Task” அதிர்ச்சியில் நிர்வாகிகள்..?
”அசைன்மெண்ட் NTK - உளவுத்துறைக்கு கொடுக்கப்பட்ட Task” அதிர்ச்சியில் நிர்வாகிகள்..?
”கொடைக்கானலுக்கு இந்த வாகனங்கள் செல்ல அவசர தடை” அறிவித்தார் ஆட்சியர்..!
”கொடைக்கானலுக்கு இந்த வாகனங்கள் செல்ல அவசர தடை” அறிவித்தார் ஆட்சியர்..!
"தெலுங்கு மக்களும் தமிழகத்தின் பகுதியானவர்கள்’ கஸ்தூரி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!
தமிழ்நாட்டை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! - 4 நாட்களுக்கு கனமழை: எப்போது எந்தெந்த மாவட்டங்களில்? 
தமிழ்நாட்டை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! - 4 நாட்களுக்கு கனமழை: எப்போது எந்தெந்த மாவட்டங்களில்? 
Embed widget