பொது மக்களுக்கு டீ வாங்கி கொடுத்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் த.வெ.க., நிர்வாகிகள்
த.வெ.க., நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இலவசமாக டீ வாங்கிக் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றனர்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர். மேலும் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வருகின்றனர்.
காட்பாடி அருகே என்ஜின் இல்லாமல் வழியில் நின்ற பயணிகள் ரயில்; சீரமைப்பு பணி தீவிரம்!
தவெக மாநாட்டிற்கு இலட்சக் கணக்கானோர் வருவார்கள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அமைத்து மாநாட்டு நிகழ்வுகள் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மாநாட்டில் யாராவது தவறினால் அல்லது வேறு பகுதிக்கு சென்று விட்டால் அவர்களை கண்டுபிடித்து தரவும் காணாமல் போனவர்களை அணுகுவதற்கும் மிஸ்ஸிங் ஜோன் உதவி மையங்கள் Missing center மாநாட்டு திடல் பகுதிகளிலும், நான்கு பார்க்கிங் பகுதிகளிலும் அமைக்கப்படுகிறது. மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
50,000 இருக்கைகளுடன் பிரமாண்டமாக தயாராகி வரும் மாநாட்டு திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் போன்ற. தேசிய தலைவர்ளுடன் இவருடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரமாண்டமாக கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு பணிகள் ஒருபுறம் நடைபெற்று இருந்தாலும் மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களையும் பொதுமக்களையும் அழைத்து வர கட்சி நிர்வாகிகள் பல்வேறு முறைகளில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் ஆத்தூர் ஒன்றிய தொண்டரணி தலைவர் லலித் மற்றும் ராகுல், மதன், மாதேஷ் சார்பாக த.வெ.க., நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இலவசமாக டீ வாங்கிக் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றனர்.மேலும், கண்ணைகவரும், விளக்குகளை கொளுத்தியும், பட்டாசு வெடித்தும் நூதனமாக அழைப்பு விடுக்கின்றனர் த.வெ.க., நிர்வாகிகள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டர் அணி தலைவர் சஞ்சீவ் குமார், சின்னாளபட்டி நகர செயலாளர் வைரமுத்து, கலந்து கொண்டனர் தொண்டரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மாநாட்டில் கலந்துகொள்ள நூதனமாக பிரச்சாரம் செய்து வரும் இவர்ளுடைய செயலை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர். மேலும் மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதி அளித்து வருகின்றன்றனர்.