மேலும் அறிய

IND Vs NZ 2nd Test: ஏமாற்றம் தந்த விராட் கோலி - 156 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட் - நியூசிலாந்து 103 ரன்கள் முன்னிலை

IND Vs NZ 2nd Test: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

IND Vs NZ 2nd Test: இந்திய அணி ஆல்-அவுட் ஆனதை தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா Vs நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி:

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பெங்களூரில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அசத்திய தமிழக வீரர்கள்:

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்களுக்கு, இந்தியா சார்பில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்ற்உம் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் கடும் நெருக்கடி கொடுத்தனர். இவர்களை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் எதிரணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் 79.1 ஓவர்கள் முடிவில், 259 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அரைசதம் விளாசினார். இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தினர்.

ஏமாற்றமளித்த ரோகித் - கோலி: இந்தியா ஆல்-அவுட்

தொடர்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று போட்டி தொடங்கியதும் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஜெய்ஷ்வால் மற்றும் கில் தலா 30 ரன்களில் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி, வெறும் 1 ரன்னில் நடையை கட்டினார். ரிஷப் பண்ட் 18 ரன்களிலும், சர்ஃப்ராஸ் கான் 11 ரன்களிலும், அஷ்வின் 4 ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். ஓரளவு தாக்குப்பிடித்த ஜடேஜா 38 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 156 ரன்களுக்கு இந்திய அணி ஆல்-அவுட் ஆனது.

வலுவான நிலையில் நியூசிலாந்து:

நியூசிலாந்து அணி சார்பில், மிட்செல் சாண்ட்னர் 7 விக்கெட்டுகளையும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும், டிம் சவுதி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். மேலும் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியுற்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற, மீதமுள்ள 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2024:
"தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு?" - முதல்வர் ரேவந்த் ரெட்டி
ABP Southern Rising LIVE: வடக்கு தெற்கிற்கு செய்ய மறுக்கிறது - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
ABP Southern Rising LIVE: வடக்கு தெற்கிற்கு செய்ய மறுக்கிறது - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
Vijay TVK Maanadu: ”பத்திரமாக வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறேன்” - தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்
Vijay TVK Maanadu: ”பத்திரமாக வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறேன்” - தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்
போதைப்பொருள் கடத்தல் வழக்கு -  முன்னாள் டி.ஜி.பி. மகன் கைது!
போதைப்பொருள் கடத்தல் வழக்கு - முன்னாள் டி.ஜி.பி. மகன் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Rain Police : கண்டுகொள்ளாத மாநகராட்சி? சாக்கடை நீரில் இறங்கிய POLICE! உடனே ஓடிவந்த காவல்துறைTVK Maanadu : Vijay Maanadu | அம்பேதகர், பெரியார் நடுவில் விஜய்அண்ணா இடம்பெறாதது ஏன்? விஜய் மாஸ்டர் ப்ளான்Madurai People vs Ko Thalapathy | MLA-வை முற்றுகையிட்ட பெண்கள் திணறிய கோ.தளபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2024:
"தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு?" - முதல்வர் ரேவந்த் ரெட்டி
ABP Southern Rising LIVE: வடக்கு தெற்கிற்கு செய்ய மறுக்கிறது - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
ABP Southern Rising LIVE: வடக்கு தெற்கிற்கு செய்ய மறுக்கிறது - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
Vijay TVK Maanadu: ”பத்திரமாக வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறேன்” - தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்
Vijay TVK Maanadu: ”பத்திரமாக வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறேன்” - தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்
போதைப்பொருள் கடத்தல் வழக்கு -  முன்னாள் டி.ஜி.பி. மகன் கைது!
போதைப்பொருள் கடத்தல் வழக்கு - முன்னாள் டி.ஜி.பி. மகன் கைது!
காட்பாடி அருகே என்ஜின் இல்லாமல் வழியில் நின்ற பயணிகள் ரயில்; சீரமைப்பு பணி தீவிரம்!
காட்பாடி அருகே என்ஜின் இல்லாமல் வழியில் நின்ற பயணிகள் ரயில்; சீரமைப்பு பணி தீவிரம்!
TN Rain Alert: கரையை கடந்த டாணா புயல் -  பள்ளிகளுக்கு விடுமுறை, தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை - வானிலை அறிக்கை
TN Rain Alert: கரையை கடந்த டாணா புயல் - பள்ளிகளுக்கு விடுமுறை, தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை - வானிலை அறிக்கை
தொடங்கியது ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் நட்சத்திரங்கள்
தொடங்கியது ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் நட்சத்திரங்கள்
மதுரை வரவேண்டிய இரண்டு விமானங்களும் வானில் வட்டமடித்தால் பரபரப்பு..
மதுரை வரவேண்டிய இரண்டு விமானங்களும் வானில் வட்டமடித்தால் பரபரப்பு..
Embed widget