(Source: ECI/ABP News/ABP Majha)
பிற கட்சிகளை சேர்ந்தவர்களை கைது செய்வது சர்வாதிகார போக்காதான் பார்க்கப்படுகிறது - தினகரன்
ஆர்.எஸ்.பாரதி, கண்ணப்பன் உள்ளிட்டோர் பட்டியலின அதிகாரிகளை பார்த்து பேசியதற்கெல்லாம் இந்த அரசாங்கம் வழக்கு போட வேண்டும் - டி.டி.வி தினகரன்
கள்ளச் சாராயம் காய்ச்சுகிறவர்கள், விற்கிறவர்களை தடுப்பதில்லை. ஆனால் திமுகவிற்கு எதிராக பேசுகின்ற எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை ஹிட்லர் பாணியில் கைது செய்கின்றனர் என உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேசினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்ற திருமங்கலம் அமமுக ஒன்றிய செயலாளர் சிவபாண்டி திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கள்ளர் பள்ளிகளுடன் இணைக்க கூடாது என்பது எனது விருப்பமும் தான். என்ன காரணத்திற்காக இது போன்ற பள்ளிகள் உருவாக்கப்பட்டது என, ஆராய்ந்து அதன் பயன் முழுமையடையும் வண்ணம் தொடர்ந்து கள்ளர் பள்ளிகளை அதன் சீரமைப்புத்துறையுடன் இருப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போதை கலாச்சாரம் மூலை முடுக்கெல்லாம் மாணவர்கள், இளைஞர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு வருவது தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக அமையப்போகிறது. கள்ளச் சாராயம் காய்ச்சுகிறவர்கள், விற்கிறவர்களை தடுப்பதில்லை., ஆனால் திமுகவிற்கு எதிராக பேசுகின்ற எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை ஹிட்லர் பாணியில் கைது செய்கின்றனர்.
சர்வாதிகார போக்கு
நீதிமன்றம் சாட்டை துரைமுருகனை கைது செய்தது, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை நாம் பார்க்கிறோம். எதிராக பேசினால் வழக்கு தொடரலாம், அதே நேரத்தில் யாருமே எங்களை பற்றியோ அரசாங்கத்தைப் பற்றியோ வாய் திறந்தால் நாங்கள் கைது பண்ணுவோம் என மிரட்டுவதற்கு தமிழ்நாட்டில் யாருமே பயப்பட மாட்டார்கள். ஆர்.எஸ்.பாரதி, கண்ணப்பன் உள்ளிட்டோர் பட்டியலின அதிகாரிகளை பார்த்து பேசியதற்கெல்லாம் இந்த அரசாங்கம் வழக்கு போட வேண்டும், அதை விட்டுவிட்டு திமுகவை பற்றி பேசுவதை தான் வன்கொடுமை சட்ட அளவிற்கு கைது செய்வோம் என பேசுகிறார்கள். பிற கட்சிகளை சேர்ந்தவர்களை கைது செய்வது என்பது சர்வாதிகார போக்காக தான் பார்க்கப்படுகிறது., அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மற்ற தலைவர்களை ஒருமையில் பேசுவது அவமரியாதையுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பம். சசிகலாவுடன் அதிமுக இணையும் என்ற கருத்து, அதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” எனக் கூறினார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Indian 2 Review: ரசிகர்களுக்கு விருந்தா? லஞ்சத்தை ஒழிக்க மருந்தா? இந்தியன் 2 முழு திரை விமர்சனம் இதோ
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே விடுமுறை அறிவிப்பு; பள்ளியை பூட்டி போராட்டம் - நடந்தது என்ன?