மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
நாளை செல்போன் மற்றும் ஆவணங்களுடன் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராக டி.டி.எஃப்., வாசனுக்கு சம்மன் !
ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் காவல்நிலையத்தில் ஆஜராக கோரி டி.டி.எஃப் வாசனுக்கு அண்ணாநகர் காவல்நிலைய சார்பில் சம்மன் ஒப்படைக்கப்பட்டது
![நாளை செல்போன் மற்றும் ஆவணங்களுடன் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராக டி.டி.எஃப்., வாசனுக்கு சம்மன் ! TTF Vasan appear in person at madurai police station tomorrow with cell phone and documents நாளை செல்போன் மற்றும் ஆவணங்களுடன் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராக டி.டி.எஃப்., வாசனுக்கு சம்மன் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/42a795dadcb53acebc58cac01d209bfd1717308600144184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டி.டி.எஃப் வாசன்
மதுரை நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மாநகர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் 3 ஆவது நாளாக கையெழுத்திட்டார். நாளை செல்போன் மற்றும் ஆவணங்களுடன் நேரில் விசாரணைக்கு ஆஜராக கோரி அண்ணாநகர் காவல்துறை சார்பில் டி.டி.எஃப் வாசனுக்கு சம்மன்.
மூன்றாவது நாளாக கையெழுத்திட்ட டி.டி.எஃப் வாசன்
டி.டி.எஃப் வாசன் கடந்த மாதம் 15 -ம் தேதி அன்று மதுரை முதல் திருச்செந்தூர் செல்லும் வழியில், வண்டியூர் டோல்கேட் அருகே காரில் செல்போன் பேசியபடி, அஜாக்கிரதையாக காரை ஒட்டியதாக அண்ணா நகர் காவல் துறையினர் டி.டி.எஃப் வாசன் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 6 -வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ”10 நாட்கள் தினசரி காலை 10 மணிக்கு அண்ணாநகர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” - என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதன்படி 3வது நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் வந்த டி.டி.எஃப் வாசன் கையெழுத்திட்டார்.
டி.டி.எஃப் வாசனுக்கு சம்மன் ஒப்படைக்கப்பட்டது
இந்நிலையில் 3 -வது நாளாக டி.டி.எஃப் வாசன் அண்ணாநகர் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் நாளை தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் காவல்நிலையத்தில் ஆஜராக கோரி டி.டி.எஃப் வாசனுக்கு அண்ணாநகர் காவல்நிலைய சார்பில் சம்மன் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் வெளியே நின்ற ரசிகர்களை சந்தித்து காவல் நிலையத்தின் அருகில் சாலை சாலை ஓரத்தில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கர்நாடக நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? - மத்திய அமைச்சர் எல்.முருகன்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - நோட்டா கட்சியா? தமிழகத்தில் பாஜக நுழைய முடியாதா? - கருத்துக்கணிப்பால் காலர் தூக்கிவிடும் அண்ணாமலை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion