Interceptor Bear 650: ராயல் என்ஃபீல்டின் இன்டர்செப்டர் பியர் 650 பைக்- முதல் டு இண்டு ஒன் மாடல்
Royal Enfield Interceptor Bear 650: ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய இன்டர்செப்டர் பியர் 650 வாகனம், 650சிசி லைன் அப்பில் டூ-இண்டூ-ஒன் எக்சாஸ்டை பயன்படுத்தும் முதல் மாடலாகும்.
Royal Enfield Interceptor Bear 650: ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய இன்டர்செப்டர் பியர் 650 மாடல் வாகனம், நடப்பாண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்டர்செப்டர் பியர் 650 இன்ஜின்:
இன்டர்செப்டர் பியர் 650 என்பது ஆஃப்-ரோடை மையமாக கொண்ட, ராயல் என்ஃபீல்டின் முதல் 650சிசி பிளாட்ஃபார்ம் மாடலாகும். நடப்பாண்டின் இறுதிக்குள்ளாகவே இந்த வாகனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏர்/ஆயில்-கூல்டு, 648சிசி, பேரலல்-ட்வின் இன்ஜின் இதில் பயன்படுத்தப்படுகிறது. முக்கிய மாற்றம் என்னவென்றால் மற்ற 650சிசி ராயல் என்ஃபீல்டு மாடல்களில் காணப்படும், இரட்டைக் குழாய்களைப் போலல்லாமல், இந்த பிளாட்ஃபார்மில் டூ-இன்-ஒன் எக்ஸாஸ்ட் சிஸ்டம் பயன்படுத்தும் முதல் பைக் இதுவாகும் . இதன் மூலம் எடை குறைக்கப்பட்டு இருப்பது, வாகனத்தின் ஆஃப் ரோட் பயணத்திற்கு உதவும் என நம்பப்படுகிறது. இந்த இன்ஜின் ஆனது மற்ற அனைத்து மாடல்களிலும் 47hp மற்றும் 52.3Nm டார்க் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. புதிய வாகனத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா என்பது அறிமுகத்தின் போதுதான் தெரிய வரும்.
இன்டர்செப்டர் பியர் 650 வடிவமைப்பு விவரங்கள்:
ஷாட்கன் 650 மற்றும் சூப்பர் மீடியர் 650 போலவே, ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் பியர் 650 ஆனது USD ஃபோர்க்கைப் பயன்படுத்தும். 650 இரட்டையர்களில் காணப்படும் எளிமையான டெலெஸ்கோபிக் யூனிட்கள் இதில் பயன்படுத்தப்படவில்லை . மற்ற 650களைப் போலல்லாமல், முன் பிரேக் டிஸ்க் புதிய ஹிமாலயன் பைக் மாடலைப் போல இதிலும் இடது புறத்தில் உள்ளது. பின்புறத்தில் உள்ள ட்வின் ஷாக் அப்சார்பர் அமைப்பு மற்ற ராயல் என்ஃபீல்டு 650s போலவே உள்ளது. ஆனால் இரு முனைகளிலும் உள்ள சஸ்பென்ஷன் யூனிட்கள் நிலையான ஸ்ட்ரீட் பைக்கை விட அதிக பயணத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
டியூபுடன் கூடிய டயர்கள்:
இன்டர்செப்டர் பியர் 650 பைரெல்லி ஸ்கார்பியன் ரேலி STR வளையங்களின் ட்ரெட் பேட்டர்னை ஒத்த பிளாக்-பேட்டர்ன் டயர்களுடன் சோதனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், டயர்கள் மீதான அரசாங்கத்தின் இறக்குமதித் தடையைத் தொடர்ந்து, அதே அளவு இந்திய டயர் உற்பத்தியாளரிடம் கிடைத்தால், இவை பெரும்பாலும் இந்தியாவில் வழங்கப்படாது. இன்டர்செப்டர் பியர் 650 டியூப் உடன் கூடிய டயர்களையே பெறுகின்றன.
தோற்ற விவரங்கள்:
21 ஆம் நூற்றாண்டின் ராயல் என்ஃபீல்டு மாடலுக்குப் பொருத்தமான, நியோ-ரெட்ரோ அழகியலில் ஸ்டைலிங் செய்யப்படுகிறது. கிளாசிக்கல் பாணியிலான எரிபொருள் டேங்க், குறைந்தபட்ச உடல் வேலைப்பாடு மற்றும் குட்டையான வால் பகுதி ஆகியவை இந்த பைக்கிற்கு மிகவும் அழகான தோற்றத்தை வழங்குகின்றன. ரெட்ரோ தோற்றம் இருந்தபோதிலும், இன்டர்செப்டர் பியர் 650 சுற்றிலும் LED விளக்குகளைப் பயன்படுத்துகிறது. நீளமான இண்டிகேட்டர்கள் புதிய ஹிமாலயனை நினைவூட்டுகிறது. இன்டர்செப்டர் பியர் 650 இந்த ஆண்டின் இறுதியில் அற்முகப்படுத்தப்ப்டும்போது, அது நிச்சயமாக எளிமையான 650 இரட்டையர்களுக்கு மேலே இருக்கும். ஆனால், ராயல் என்ஃபீல்டு ஃபிளாக்ஷிப் - சூப்பர் மீடியர் 650 க்கு கீழே இருக்கும்.