மேலும் அறிய

கர்நாடக நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? - மத்திய அமைச்சர் எல்.முருகன்

காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது. பா.ஜ.கவிற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் பெரிய ஆதரவை கொடுத்துள்ளார்கள். - எல்.முருகன்

தேர்தல் முடிவில் 400க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை பிரதமர் மோடி நிகழ்த்த உள்ளார்-மத்திய இணை அமைச்சர் எம்.முருகன் மதுரையில் பேட்டி.
 
எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு
 
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் எல்.முருகன் பேசுகையில்...,” பா.ஜ.க.,விற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்கள் ஒரு பெரிய ஆதரவை கொடுத்துக் கொண்டிருப்பதை இந்தியா முழுவதும்  பார்க்க முடிகிறது. 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்கள், 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நடத்த இருக்கிறார். இந்தியா முழுவதும் மக்கள் எங்கு பார்த்தாலும் எங்கு சென்றாலும் மோடி, மோடி என்று பெரிய ஆதரவு அலைகளை கொடுக்கிறார்கள். நம் தேசத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்ற மோடியை மக்கள் பாராட்டுகிறார்கள். மூன்றாவது முறையாக மோடியின் ஆட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறுவது நிச்சயிக்கப்பட்டுள்ளது.
 
பிரதமர் மோடி ஜி தியானம் செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் பேசுவது குறித்த கேள்விக்கு.
 
நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். நம் நாட்டின் நன்மைக்காக தியானம் செய்கிறார் பிரதமர் மோடி. சிறு வயது முதல் ஆன்மீகத்தில் மிகவும் பற்று கொண்டவராக பிரதமர் மோடி இருந்திருக்கிறார். கடந்த ஆண்டு கூட இமயமலையில் தியானத்தை செய்தார். தற்போது 3 நாட்களாக பிரதமர் மோடி கடும் தவம் செய்து வருகிறார். முனிவர் போல தவம் செய்து வருகிறார். காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது. காங்கிரஸ் கூட்டணி 100 சீட் கூட தாண்ட முடியாது. அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு செல்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டத்திற்கு எங்கும் செல்ல மாட்டார். அந்த அளவிற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஒவ்வொரு ஒரு மூலையில் திரும்பி இருந்தார்கள் என்பது தெரியும். காங்கிரஸ் கூட்டணியால் எந்த பிரயோஜனமும் இல்லை. நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை பெறுவோம்.  
 
மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் 15 லட்சம் பணத்தை பிரதமர் மோடி தருவாரா என்று குறித்த கேள்விக்கு பதில் அளித்த எல்.முருகன்
 
15 லட்சம் தருகிறேன் என்று பிரதமர் மோடி இதுவரை சொல்லவே இல்லை. இது எதிர்க்கட்சிகளால் கட்டமைக்கப்பட்ட கட்டுக் கதையாகும். அதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளது. இந்தி தெரியாதவர்கள் இந்தி படிக்க வேண்டும். ஏற்கனவே கருப்பு பணம் வைத்திருந்தவர்கள். ஊழல் செய்தவர்கள் எல்லாம் சிறையில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி அவர்களின் அடுத்த ஆட்சியில் ஊழல் என்பதே இல்லாமல் இருக்கும். கருப்பு பணம் என்பது முற்றிலும் இல்லாமல் அழிக்கப்படும். கருப்பு பணத்திற்கு இந்தியாவில் இடமில்லை. டிஜிட்டல் டிரான்ஸ்பர் சாதாரண மக்களையும் சென்று சேர்ந்து இருக்கிறது. இதுதான் பிரதமர் மோடியின் முன்னெடுப்பு. தி.மு.க.,வின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் பா.ஜ.க.,வின் கூட்டணியாக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம். பிரகாஷ்ராஜ்  கர்நாடகா நடிகர் அவ்வளவு தான். அவருடைய கருத்துக்களை நாம் இங்கே பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.
 

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget