மேலும் அறிய
Advertisement
தாமிரபரணியில் சட்டவிரோத மணல் குவாரி செயல்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
’’ஒவ்வொரு குடிமகனின் உயிர் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமை. ஆகவே மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு’’
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் எல்கைக்கு உட்பட்ட பகுதியில், அகரம் கிராமத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடை பெறுகிறது என்றும் ,இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்து எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை, எனவே சட்டவிரோத மணல் குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் தரப்பில்," தாமிரபரணி ஆற்று மணலில் பல கனிமங்கள் உள்ளன. மேலும் அணு சக்திக்கு தேவையான கனிமங்களும் உள்ளன. இவை அரிய வகையில் கிடைக்கும் கனிமங்கள் போல தெரிகிறது" என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வு, இன்று நீதிபதிகள் உத்தரவை வெளியிட்டனர். அதில்," மாவட்ட ஆட்சியர் மற்றும் அணு ஆராய்ச்சித்துறையின் பதில்மனுவின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள மணலில் 10% கார்னைட், இலுமினைட், மோனசைட் போன்ற அரிய கனிமங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த பகுதியை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, கனிமங்களை அரசுக்கு உதவும் வகையில் விதிகளின்படி கையாள வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர், கழுகுப்பார்வையிலான படங்கள், வீடியோ பதிவு உள்ளிட்டவற்றை தாக்கல் செய்திருக்கிறார்.
அதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் மணல் எடுக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. அதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி DSP அந்தஸ்த்திற்கு குறையாத காவல்துறை அதிகாரி விசாரிக்கவும் உத்தரவிடப்படுகிறது. அப்பகுதியில் எடுக்கப்பட்ட மணல் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதா? என விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் உயிர் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமை. ஆகவே மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக காவல்துறை தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் " என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion