Madurai : தேவர் ஜெயந்தி : மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் ..! முழு விவரம் உள்ளே..
மதுரையில் தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு, வியாபாரபெருமக்கள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களின் நலன்கருதி இதில் குறிப்பிட்டுள்ள மாற்றுப் பாதைகளை தற்காலிகமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்’ என்று பிரகடனப்படுத்தி வாழ்ந்த தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். இது போன்று மேலும் பல்வேறு சிறப்புகளுக்குரிய உன்னதத் தலைவரின் 115-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
மின் ஒளியில் ஜொலிக்கும் மதுரை தேவர் சிலை !#madurai | #DevarJayanthi pic.twitter.com/iiDliuETGj
— arunchinna (@arunreporter92) October 28, 2022
இந்நிலையில் நாளை தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. லாரிகள் மற்றும் கனகர வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10.30மணி வரை நகருக்குள் கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி நுழைய தடை செய்யப்படுகிறது. விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதி இல்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்