ஆடித் திருவிழா பார்க்க அழகர்கோயிலுக்கு பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிப் பயணம்... அடடே... அழகு !
திருப்பத்தூர் வழியாக அழகர்கோயில் செல்லும் கோட்டையூர் வேலங்குடி நாட்டார்களின் குலதெய்வ வழிபாட்டு மாண்டுவண்டிப் பயணம் ; வழி நெடுகிலும் காண்போரை ரசிக்க வைத்தது.
பாரம்பரியம் மாறாமல் மாட்டு வண்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர் கோயிலுக்கு குல தெய்வ வழிபாட்டுப் பயணம் மேற்கொண்ட நாட்டார்கள்.
அழகர்கோயில் ஆடித்திருவிழா
மதுரை மாவட்டம் அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர் கோயில் வளாகத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிமாதம் நடைபெறும், ஆடிப்பிரம்மோற்சவ பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி திருவிழாவை காண பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி கட்டி வருவது சிறப்பாக இருக்கும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய அழகர்கோயிலில், ஆடிப்பெருந்திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆடித் திருவிழாவை கொண்டாட பொதுமக்கள் கோயிலுக்கு தொடர்ந்து வந்து செல்கின்றனர். இந்நிலையில் குல தெய்வ வழிபாட்டுப் பயணத்தை நாட்டார்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி மேற்கொண்டனர்.
- "கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!
மாட்டுவண்டியில் அழகர்கோயிலுக்கு புறப்பாடு
சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் வேலங்குடி நாட்டார்கள் தலைமுறை தலைமுறையாக குலதெய்வ வழிபாட்டிற்காக மாட்டுவண்டியில் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கோட்டையூர் வேலங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 கிராம நாட்டார்களின் உறவின் முறையார்கள், பங்காளிகள் தொன்று, தொட்டு மாட்டுவண்டியில் அழகர்கோவிலில் உள்ள குலதெய்வத்தினை வணங்குவதற்கு மாட்டுவண்டியில் பயணிப்பதை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்கள். இந்த ஆண்டிற்கான பயணமாக வேலங்குடி பிள்ளையார் கூடத்திலிருந்து கடந்த புதன்கிழமை அன்று 30 வண்டிகளில் மாடுகள் பூட்டி புறப்பட்டார்கள். முதல்நாள் பயணம் மேற்கொண்ட இவர்கள் வேலங்குடியிலிருந்து குன்றக்குடி வழியாக திருப்பத்தூர் வந்தடைந்தனர்.
மாட்டுவண்டி பயணம் பெருமிதம்
திருப்பத்தூர் அருகே உள்ள எஸ்.எஸ்.கோட்டையில் இரவு தங்கி மறுநாள் புறப்பட்டு மேலூர் வழியாக (19-ம் தேதி) அழகர்கோவில் சென்றடைந்து தீர்த்தமாடுதலில் பங்கு பெறுகின்றனர். சனிக்கிழமை 20-ம் தேதி தங்களது நேர்த்திக் கடனான கிடாவெட்டு நிகழ்த்தி அனைவருக்கும் அன்னதானம் வழங்கி 21 -ல் நடைபெறும் தேரோட்டத்தில் பங்கு கொண்டு அதே மாட்டு வண்டியில் சென்ற இடத்திற்கு வந்தடைகின்றர். தற்பொழுது வளர்ந்துவரும் விஞ்ஞான வளர்ச்சியிலும் போக்குவரத்து துறையில் எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும், இன்றளவும் குல தெய்வ வழிபாட்டிற்கு மாட்டுவண்டி பயணத்தை கடைபிடித்து வருவதாகவும், வெளிமாநில் மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் இந்த குல தெய்வ வழிபாட்டில் தவறாது கலந்து கொள்வதை இறைவனுக்கு செய்யும் கடமையாகவும், இந்த மாட்டு வண்டி பயணம் எங்கள் முன்னோர்களுக்குச் செய்யும் மரியாதையாகவும், இன்றளவும் பின்பற்றி வருவதாகக் கூறுகிறார்கள்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - "டிகிரியால் பயன் இல்ல.. பஞ்சர் கடை வையுங்க" மாணவர்களுக்கு பாஜக எம்எல்ஏ அட்வைஸ்!