கொடைக்கானல் சுற்றுலா: QR கோடு மூலம் கட்டணம் வசூல்! பயணிகள் அதிர்ச்சி, வானிலை மாற்றம் - முழு விவரம்!
கொடைக்கானலில் பிற்பகலில் வழக்கத்தைவிட அதிகமான மேகமூட்டம் நிலவியதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.
இந்தியாவிலேயே மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'காடுகளின் பரிசு' என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம். கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது. கொடைக்கானலில் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில், கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களாக பில்லர் ராக், குணா குகை,பைன் மர சோலை, மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சுற்றுலா தலங்களுக்குள் செல்வதற்கு, சுற்றுலா தலங்களின் நுழைவு பகுதியிலேயே நுழைவு கட்டணம் நபர் ஒருவருக்கு 30 ரூபாய் வீதமும், சிறியவர்களுக்கு 20 ரூபாய் வீதமும், வாகனங்களின் நுழைவு கட்டணம் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வசூல் செய்யப்பட்டு, சுற்றுலா தலங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து நாளை முதல் இந்த சுற்றுலா தலங்களின் நுழைவு பகுதியிலேயே முன்னதாக செல்போன் சிக்னல் உள்ள இடமான பசுமை பள்ளத்தாக்கு அருகே கியூஆர் கோடு மூலம் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு, வனப்பணியாளர்கள் மூலம் சுற்றுலா பயணிகளும், சுற்றுலா வாகனங்களும் சுற்றுலா தலங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது. இந்த கியூஆர் கோடு மூலம் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுவது சாத்தியகூறு உள்ளதா என சுற்றுலாப்பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்களிடையே கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கொடைக்கானலில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமை, ஞாயிற்று கிழமையில் அதிகாலை முதலே மேகமூட்டமும், விட்டுவிட்டு சாரல் மழையும் பெய்தது. பிற்பகலில் வழக்கத்தைவிட அதிகமான மேகமூட்டம் நிலவியதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். இதனால் மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக இயக்கப்பட்டன.
இதனிடையே சுமாா் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது.கொடைக்கானலில் தொடா்ந்து சாரல் மழையுடன் பனிப்பொழிவு காணப்படுவதால் வழக்கத்தை விட அதிகமான குளிா் நிலவுகிறது. இதனால் குழந்தைகள், முதியவா்கள் பலா் பாதிப்படைந்து வருகின்றனா். மேலும் சுற்றுலா இடங்களை பாா்க்க முடியாமல் தாங்கள் தங்கியிருந்த அறைகளிலேயே சுற்றுலாப் பயணிகள் முடங்கினா். தொடா் மழை காரணமாக ஏரியில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.





















