மேலும் அறிய

தொட்டப்பநாயக்கனூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு துவக்கம்

தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் வருகின்ற 12.02.2024-ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான விண்ணப்பம் துவக்கம்.

மதுரை ஜல்லிக்கட்டு

தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புகள், சொந்த ஊர் திரும்பும் மக்கள், கோயிலில் குவியும் மக்கள் ஆகியோருக்கு நிகராக மக்கள் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளே.

- Uttarkhand Civil Code: லிவ் இன் உறவுக்கு ஜெயில்! பெற்றோர் சம்மதம் இனி கட்டாயம் - மிரள வைக்கும் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம்!

தொட்டப்பநாயக்கனூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு துவக்கம்

ஜல்லிக்கட்டில் நெகிழ்ச்சி 

மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது ஆகும். இங்கு நடைபெறும் போட்டிகளை காண தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக படையெடுத்து செல்வார்கள். இந்நிலையில் இந்தாண்டு கூடுதல் விருந்தாக கீழக்கரை பிரமாண்ட மைதானத்திலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த சூழலில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள  பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக - 8 கிராம மக்கள் ஒன்று திரண்டு சுமார் 13 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மூகூர்த்த கால் நடும் விழா

ஜமீன் ஜல்லிக்கட்டு
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோவிலை புரணமைப்பு செய்து, சுமார் 400 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழாவுடன் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த இந்த ஆண்டு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பழமை வாய்ந்த இந்த ஜக்கம்மாள் கோவிலின் கும்பாபிஷேக விழா மற்றும் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்த கால் நடும் விழா 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து சிறப்பு பூஜைகள் செய்து கால் கோல் ஊன்றி முகூர்த்தக்கால் நடப்பட்டு கும்பாபிஷேகம் மற்றும் ஜல்லிக்கட்டுக்கான பணிகளை துவக்கி வைத்தனர்.
 
உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மூகூர்த்த கால் நடும் விழா
 
ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன் பதிவு நாளை முதல் துவக்கம்

இந்நிலையில் தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் வருகின்ற 12.02.2024-ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள்,  09.02.2024 காலை 10.00 முதல் 10.02.2024 காலை 10.00 வரை https://madurai.nic.in என்ற இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்குமாறு உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - திருச்சியில் பயங்கரம்... பெண் எரித்து கொலை - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸ் விசாரணை

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - CM M.K.Stalin Spech: ”ஸ்பெயின் பயணம் சாதனை பயணமாக அமைந்தது”.. சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget