பெட்ரோல் குண்டு வீசுவோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர்- தென் மண்டல ஐ.ஜி
பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் விநியோகம் செய்ய வேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளது என தென் மண்டல ஐ.ஐ., அஸ்ரா கார்க் பேட்டி.
மதுரை சர்வேயர் காலனி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திண்டுக்கல் மாவட்டம் குடைப் பாறைபட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் என்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு மர்ம கும்மல் பெட்ரோல் குண்டு வீசியதில் ஒரு கார், 5 டூவீலர் எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பேகம்பூரை சேர்ந்த சிக்கந்தர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகிறது. மேலும் தென் மாவட்டத்தில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறோம்.
தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் - தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்https://t.co/wupaoCQKa2 | #AsraGarg #PetrolBombs #tamilnadu pic.twitter.com/WN48py2hmu
— ABP Nadu (@abpnadu) September 25, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்