மேலும் அறிய
Thoothukudi-Mettupalayam Train: தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் - சேவை எப்போது தொடக்கம்?
இந்த புதிய ரயிலின் வழக்கமான சேவை ஜூலை 20 முதல் தூத்துக்குடியில் இருந்து துவங்குகிறது.
![Thoothukudi-Mettupalayam Train: தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் - சேவை எப்போது தொடக்கம்? Thoothukudi to Mettupalayam Train Minister of State L Murugan to inaugurate new express train twice a week tnn Thoothukudi-Mettupalayam Train: தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் - சேவை எப்போது தொடக்கம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/f41f97b941dc39570c3ccd32f0f1aaaf1719898770437184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரயில் - மாதிரிப்படம்
Source : Other
INTRODUCTION OF TUTICORIN - METTUPALAYAM -TUTICORIN BI-WEEKLY EXPRESS
புதிய ரயிலின் துவக்க விழா
தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே வாரம் இருமுறை சேவை விரைவு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை சேவை விரைவு ரயில் (16766) தூத்துக்குடியில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாரம் இருமுறை சேவை சிறப்பு ரயில் (16765) மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 07.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த புதிய ரயிலின் வழக்கமான சேவை ஜூலை 20 முதல் தூத்துக்குடியில் இருந்து துவங்குகிறது. இருந்தபோதிலும் இந்த புதிய ரயிலின் துவக்க விழா நாளை ஜூலை 19 அன்று காலை 10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகிறது.
இணைஅமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்
மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி துவக்க விழா சிறப்பு ரயில் சேவையை மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்துறை இணைஅமைச்சர் முனைவர் எல். முருகன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். விழாவில் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 ரயில் மேலாளர் அறையுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‘மதுரையில் வாக்கிங் போகாதீங்க ; அப்பறம் இடைத் தேர்தல் வந்துரும்’ - காரணம் சொன்ன செல்லூர் ராஜூ
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Red Alert: நீலகிரிக்கு ரெட் அலர்ட், கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion