மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் தர மறுத்த வழக்கு: கைதான இருவர் ஜாமீன் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தைச் சேர்ந்த கைதான இருவர் ஜாமீன் கோரிய வழக்கு.
![சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் தர மறுத்த வழக்கு: கைதான இருவர் ஜாமீன் கோரிய வழக்கு ஒத்திவைப்பு Thenkasi Caste Discrimination case adjourned for final hearing சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் தர மறுத்த வழக்கு: கைதான இருவர் ஜாமீன் கோரிய வழக்கு ஒத்திவைப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/01/cac5aaffccdc6cdcff7ce3033f3e9a721667291953623102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுரைக்கிளை உயர்நீதிமன்றம்
தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தைச் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் தர மறுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் ஜாமின் கோரிய வழக்கை தீர்ப்பிற்காக ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் சிறுவர்கள் சிலர் திண்பண்டங்கள் வாங்கச் சென்றுள்ளனர். ஊர்க்கட்டுப்பாடு காரணமாக திண்பண்டம் வாங்க வரக் கூடாது. வீட்டில் போய் சொல்லுங்கள் எனக் கூறி கடைக்காரர் சிறுவர்களுக்கு திண்பண்டம் தர மறுத்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் கடை உரிமையாளர் மகேஸ்வரன், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
இதையடுத்து இவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கினை தீர்ப்பிற்காக திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
மற்றொரு வழக்கு
வைகை அணையிலிருந்து ஊர்மெச்சிகுளம் கால்வாய் பாதையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு இருந்தால் அதனை மாவட்ட ஆட்சியர் அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
பெரியார் வைகை பாசன பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் இணைந்து ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலை 3 வாரத்தில் தயார் செய்யவும், அதில் ஆக்கிரமிப்பு இருந்தால் 8 வாரத்திற்குள் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஊர்மெச்சி குளத்தை சேர்ந்த ஸ்ரீதர் ஆறுமுகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல் செய்த மனு.
அதில், "தென் மாவட்டத்தில் ஐந்து மாவட்டங்கள் நீர் நிலையாக ஆதாரமாக வைகை இருந்து வருகிறது வைகையில் இருந்து பரவை- ஊர்மெச்சிகுளம் பகுதியில் உள்ள பெரிய கண்மாய்க்கு கால்வாய் வழியாக வைகை நீர் வருகிறது.
இந்த கால்வாய் நீர் பாசனம் தான் இந்த பகுதியில் பல்லாயிர கணக்கான ஏக்கர் விவசாயிகள் நீர் பாசனமாக எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கால்வாய் வருகின்ற பகுதிகளில் கட்டிடங்கள் வணிக நிறுவனங்கள் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது இந்த ஆக்கிரமிப்பினால் தற்போது நீர்வரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
எனவே, ஊர்மெச்சிகுளம் வரக்கூடிய கால்வாய் பாதையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், வைகை அணையில் இருந்து ஊர்மிச்சிக் குளம் கால்வாய் பாதையிலுள்ள ஆக்கிரப்புகளை அகற்றுவது குறித்து பெரியார் பாசன பொதுப்பணித்துறை அதிகாரி, வட்டாட்சியர் ஆகியோர் ஒன்றிணைந்து அளவீடு செய்து 3 வாரத்தில் அறிக்கை தயாரிக்க வேண்டும் அதில், ஆக்கிரமிப்புகளில் உள்ள கட்டிடங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் 8 வாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion