தேனி : பெரியகுளம் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
பெரியகுளம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு. சீரான நீர்வரத்து இருப்பதால் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்து வனத் துறை அறிவிப்பு செய்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெரியகுளத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலின் நடுவில் அமைந்துள்ளது தான் கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலை வட்டகணல் மலைப்பகுதியில் பெய்கிற மழை நீரானது இயற்கையான மூலிகை வேர்களுக்கு நடுவில் உருண்டோடி சிறு,சிறு ஓடைகள் வழியாக வந்து ஆறாகப் பெருக்கெடுத்து கும்பக்கரை அருவியை வந்தடைந்து மூலிகை கலந்த குளிர்ந்த நீராக ஆர்ப்பரித்து கொட்டும் அழகிய அருவியாகும்.
இந்த அருவிக்கு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருடம் தோறும் வருவது வழக்கம். அதுமட்டு மில்லாமல் தமிழகத்திலுள்ள அண்டை மாவட்டங்கள மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் இந்த அறிவியை காண நாள்தோறும் ஏராளமானோர் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
தற்போது கோடை காலம் நெருங்கி விட்ட படியால் மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் பகுதியில் மழை இல்லாத காரணத்தினால் கும்பக்கரை அருவிக்கு சீரான நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் கோடையின் வெப்பத்தை தணிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கும்பக்கரை அருவியில் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்..
மேலும் இதுகுறித்து தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜன் கூறுகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் சூழலில் பெரும்பாலான அருவிகளில் நீர் வரத்து நின்று விடட படியால் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் மட்டும் சீரான நீர்வரத்து உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதியும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக தற்போது தொடர்ந்து குளிப்பதற்கு அனுமதி அளித்து வருகிறோம் என கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்