மேலும் அறிய

தேனி: கொளுத்தும் வெயில்.. குறைந்து வரும் அணைகளின் நீர் மட்ட அளவுகள்.. சிக்கலாகுமா?

கோடை வெயில் தொடர்ந்து அதிகமாக நீடிக்கும் என்பதால், அணையின் நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

தமிழக, கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர்ப்பாசன ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக போதிய மழைப்பொழிவு இல்லை.

Jayakumar: 'பா.ஜ.க. அடக்கி வாசிப்பதே நல்லது; இல்லையென்றால்...' - பகிரங்க எச்சரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

தேனி: கொளுத்தும் வெயில்.. குறைந்து வரும் அணைகளின் நீர் மட்ட அளவுகள்.. சிக்கலாகுமா?

இதனால் அணைக்கு நீர்வரத்து குறையத்தொடங்கி உள்ளது. 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று 116.05 அடியாக குறைந்தது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்து முற்றிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல  தேனி அருகே உள்ள  ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர், பாசன ஆதாரமாக விளங்குகிறது. வைகை அணைக்கு வருசநாடு, வெள்ளி மலை, பொம்மராஜபுரம், அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெய்யும் மழை காரணமாக நீர்வரத்து ஏற்படும்.

TN Assembly: மீனவர்களுக்காக அதிமுகவுடன் கைகோர்த்த விசிக: பேரவையில் உறுதியளித்த அமைச்சர் மா.சு!

தேனி: கொளுத்தும் வெயில்.. குறைந்து வரும் அணைகளின் நீர் மட்ட அளவுகள்.. சிக்கலாகுமா?

இது மட்டுமில்லாமல் முல்லைப்பெரியாற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் அணைக்கு நீர்வரத்தாகவும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் கோடை வெயில் அதிகமாக இருந்து வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக கண்மாய், ஊருணி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நீர்வரத்து இன்றி வறண்டு வருகின்றன.

அதன்படி, வைகை அணைக்கும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 38 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இது தவிர அணையில் தேங்கி இருக்கும் தண்ணீரும் வெயிலால் ஆவியாகி வருகிறது. அணைக்கு நீர்வரத்து இல்லாததாலும், தண்ணீர் ஆவியாவதாலும் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 54.23 அடியாக உள்ளது.

சமூக நீதியில் அடுத்த சிக்ஸர்... கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்..!

தேனி: கொளுத்தும் வெயில்.. குறைந்து வரும் அணைகளின் நீர் மட்ட அளவுகள்.. சிக்கலாகுமா?

அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது. மேலும் கோடை வெயில் தொடர்ந்து அதிகமாக நீடிக்கும் என்பதால், அணையின் நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget