தமிழர்களின் பாரம்பரிய கலை வளரி வீசும் பயிற்சி... ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான வளரி வீசும் பயிற்சி முகாமில் பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
தமிழர்களின் வீர கலைகளில் ஒன்றான வளரி கலை தற்பொழுது அழிவின் விளிம்பில் உள்ளது. இந்த கலையானது, தமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை தமிழர்கள் பயன்படுத்தி வந்தனர்.17ஆம் 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அப்பொழுது உள்ள அரசர்கள் இக்கலையை பெரிதும் பயன்படுத்தியதால் ஆங்கிலேயப் படைகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானதால் ஆங்கிலேயர்கள் இதை தடுக்க சட்டம் இயற்றி பயன்படுத்துவோரை தூக்கிலிட்டனர்.
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
தற்பொழுது அழிவின் விளிம்பில் உள்ள வளரி வீசும் கலையானது கணிதத்தையும், இயற்பியலையும் கணித்து செயல்படுத்தக்கூடிய கலைகளில் ஒன்றாகும். இந்தக் கலையை மீட்டெடுத்து இக்கால தலைமுறைகளுக்காவது இந்த கலையை கற்பிக்கும் விதமாகவும், தற்போது உள்ள பள்ளி மாணவ ,மாணவியர் கற்றுக்கொள்ளும் விதமாகவும் பெரியகுளம் நேதாஜி சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மற்றும் மருது வளரி பயிற்சி பள்ளியும் இணைந்து நடத்திய வளரி வீசும் பயிற்சி முகாம் பெரியகுளத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வளரி வீசும் பயிற்சியை மேற்கொள்வதற்காக 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பெண் குழந்தைகளும் வளரி கலையை கற்றுக் கொள்வதற்காக ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர். வளரி வீசும் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு வளரி வீசும் போது வளரி செயல்படும் விதத்தையும் அறிவியல் நுட்பத்தையும், செயல்படும் விதத்தையும் விளக்கிக் கூறி பயிற்றுவிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமிற்கு நெல்லை, ராமநாதபுரம் , மதுரை தேனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 20க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்குபெற்று 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்றுவித்தனர். வளரி வீசும் பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்று சிறப்பாக வளரி வீசிய பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது . தமிழர்களின் இந்த வளரி ஆயுதத்தை கண்டு அந்நிய படைகள் வியந்து நின்று நடுங்கிய காலம் போய் வளரி ஆயுதம் மறைக்கப்பட்டு தற்போது மீண்டும் இளம் சிறார்களுக்கு கற்றுக் கொடுத்து வரும் இந்த இளைஞர்களின் முயற்சியினை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.