மருமகனா வரனும்னா வழுக்கு மரம் ஏறனும்.. மாமன்மார்கள் நடத்திய போட்டி - எங்கு தெரியுமா?
வத்தலகுண்டு அருகே மாமன் முறை கொண்டவர்களால் நட்டு வைக்கப்பட்ட வழுக்கு மரத்தில் மருமகன் முறை கொண்டவர்கள் ஏறும் விளையாட்டுப் போட்டி நடந்தது.

தமிழ்நாட்டில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் ஆராதிக்கப்படும் உறவுகளில் ஒன்று தான் தாய்மாமன் உறவு. காலம் காலமாக மிகவும் கெத்தாக உலா வரும் ஒரு உறவு என்றால் அது தாய்மாமன் உறவு தான். ஏனைய உறவுகளுக்கு இல்லாத உரிமையும் உணர்வும் தாய்மாமனுக்கே உண்டு.
பாரம்பரியமான தமிழகத்தின் தென் மாவட்டத்தின் உயிர் மூச்சு என்று சொல்லப்படும் தாய்க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவிற்கு தாய் மாமனுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது வழக்கம். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் தனது அக்கா குழந்தைகள், தங்கச்சி குழந்தைகளுக்கு எந்த விசேஷங்கள் என்றாலும் தாய்மாமன் தன்னால் முடிந்த அளவு அனைவரையும் வியக்க வைக்க வகையிலும் நான் இருக்கிறேன் பயப்பட வேண்டாம் எனக் கூறி விழாக்களில் செய்முறைகளோடு வந்து நிற்பது வழக்கம் அதேபோல் தாய்மாமனுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படும். இப்படி தாய்மாமன் உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வழக்கம் தென் மாவட்டங்களில் அதிகம் உண்டு.
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ப.விராலிப்பட்டி கிராமத்தில் பொங்கல் விழா பண்டிகையை யொட்டி மாமன் முறை கொண்டவர்களால் நட்டு வைக்கப்பட்ட வழுக்குமரத்தில் மருமகன் முறை கொண்டவர்கள் ஏறும் வினோத விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
ப.விராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மேற்கு வீட்டு பங்காளிகள் என்னும் மாமன் முறை கொண்டவர்கள் ஊர் மைதானத்தில் ரூபாய் 11 ஆயிரத்தை பரிசு பணத்தை கட்டி வழுக்கு மரத்தை நட்டு வைத்தனர்.பின்னர் தங்களுடைய மருமகன், மாப்பிள்ளை உறவுமுறை கொண்டவர்களை வழுக்கு மரம் ஏறுவதற்கு அழைப்பு விடுத்தனர். கேலியும், கிண்டலுமாக மாமன்கள் விடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொண்ட மருமகன்கள் ரோசத்துடன் களத்திற்கு வந்தனர்.
Israel Hamas Ceasefire Deal: அப்பாடா..! முடிவுக்கு வந்த 15 மாத காஸா போர், இஸ்ரேலும் ஹமாசும் ஒப்புதல்
வந்தவர்களை மாலை அணிவித்து வரவேற்ற மாமன்கள் வழுக்கு மரம் ஏறி பரிசுகளை பெற உற்சாகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து மருமகன் உறவு முறை கொண்ட ஏராளமான பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து வழுக்கு மரத்தில் ஏறி பரிசு பெறும் முயற்சியில் ஈடுபட்டனர் . மரம் ஏறும் மருமகன்களை தண்ணீர் ஊற்றி மாமனார்கள் தடுத்து கீழே இழுத்தனர். விளையாட்டு என்று இல்லாமல் மன மகிழ்ச்சியுடன் மாமன், மருமகன் உறவுகளை கொண்டாடும் விதமாக இந்த வழக்கு மர போட்டி அமைந்தது, இருப்பினும் போட்டி நேரத்திற்குள் மருமகன்கள் பரிசு தொகையை எடுக்க முடியாததால் முடிவில் மாமனார்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.ஆரவாரத்துடன் நடந்த வழுக்கு மரம் போட்டியை ஏராளமானோர் திரண்டு வந்து கண்டு ரசித்தனர்.

