சிறப்பு பேருந்தில் அருவி போல் கொட்டிய மழைநீர்; குடைபிடித்தபடியே பயணித்த பொதுமக்கள்
கோயில் திருவிழாவிற்காக விடப்பட்ட சிறப்பு பேருந்துகளை இப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்றும் இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
தேனி: சித்திரை திருவிழாவிற்காக விடப்பட்ட அரசு சிறப்பு பேருந்தில் அருவி போல் மழை நீர் கொட்டியதால் பயணிகள் குடைபிடித்தபடியே பயணம் செய்தனர்.
Today Movies in TV, May 12: சச்சின் முதல் கேப்டன் மில்லர் வரை.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
தேனி மாவட்டம் வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரிசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 8 நாட்கள் வரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடி ஏற்றம் எனப்படும் கம்பம் நடும்விழா கடந்த 17ம் தேதி தொடங்கி வரும் செவ்வாய் கிழமை வரையில் நடைபெறுகிறது.
தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை முதல் இரவு வரை கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி அருகே உள்ள வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்ற நிலையில் இதற்காக தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து அரசு போக்குவரத்து கழக சார்பில் வீரபாண்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அப்போது தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து வீரபாண்டி நோக்கி வந்த அரசு பேருந்தில் நேற்று இரவு பெய்த மழையினால் பேருந்ததின் மேற்பகுதியில் இருந்து தண்ணீர் பேருந்துக்குள்ளே வர தொடங்கியது .
பேருந்துகளில் ஆங்காங்கே அருவி போல் மழை தண்ணீர் வந்ததால் பேருந்தில் இருக்கைகள் இருந்தும் அமர்ந்து பயணிக்க முடியாமல் மழையில் நனைந்தவாறு நின்றபடியே பயணித்தனர். சிலர் தாங்கள் வைத்திருந்த குடைகளை விரித்து மழை நீரில் இருந்து தங்களை பாதுகாத்து பயணித்தனர். இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் மழை நீரில் நனைந்த வாரே பயணித்தது பெரும் அவதிக்கு உள்ளாகினர். கோயில் திருவிழாவிற்காக விடப்பட்ட சிறப்பு பேருந்துகளை இப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்றும் இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.