Theni: தொடர் மழையால் முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. கேரள மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உயரம் 152 அடி ஆகும். இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த அணையின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் முதல் போக சாகுபடிக்காக இந்த அணையில் இருந்து ஜூன் மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டும் இதேபோல் கடந்த மாதம் ஜூன் 1-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த ஆண்டு பருவ மழை மற்றும் கோடைமழை சரிவர பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
“அதிமுக உடையவும் இல்லை; சிதறவும் இல்லை” - மதுரை மாநாட்டிற்கான இலட்சினை வெளியிட்டார் இபிஎஸ்
இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 114.85 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 112 கனஅடியாக இருந்தது. சாரல் மழையால் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 602 கனஅடியாக அதிகரித்தது. இன்று அணையின் நீர்மட்டம் 115.80 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 256 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சாரல் மழை மேலும் தீவிரம் 7அடைந்தால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் அதிகரிக்கக் கூடும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று இன்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:- முல்லைப்பெரியாறு-32.6, தேக்கடி-39.4, கூடலூர்-3.6, உத்தமபாளையம்-2.8, சண்முகா நதி-4.2, போடி-5.4, சோத்துப்பாறை-5, மஞ்சளாறு -14, பெரியகுளம்-7, வீரபாண்டி-5.2, அரண்மனைப்புதூர்- 2.2, ஆண்டிப்பட்டி- 3.8.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்