தேனி: 50 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்
வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்ட போதும், அணைக்கு போதுமான நீர்வரத்து இருந்ததால் அணை நீர்மட்டம் கடந்த ஒருமாதமாகவே குறையவே இல்லை.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக வைகை அணை விளங்குகிறது. இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் கடந்த மாதம் முதல் வாரத்தில் வைகை அணையின் நீர்மட்டம், முழுக்கொள்ளளவாக நிர்ணயம் செய்யப்பட்ட 69 அடியை எட்டியது.
மாநிலங்களில் குடும்ப அரசியலை எதிர்த்து பாஜக போராடி வருகிறது - ஜே.பி.நட்டா
மேலும், வைகை அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காகவும் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதுதவிர தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் வைகை அணையில் இருந்து உபரிநீரும் திறக்கப்பட்டது. எப்போதும் 69 அடியில் நிலைநிறுத்தப்படும் வைகை அணை, இந்த ஆண்டு அதன் உச்ச உயரமான 71 அடிவரையில் தண்ணீர் தேக்கப்பட்டது.
விமான நிலையம் எதிர்ப்பு குரல்... பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாமல் போராடும் கிராம மக்கள்..!
இதற்கிடையே வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்ட போதும், அணைக்கு போதுமான நீர்வரத்து இருந்ததால் அணை நீர்மட்டம் கடந்த ஒருமாதமாகவே குறையவே இல்லை. இதன்காரணமாக வைகை அணை நீர்மட்டம் கடந்த 50 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிக்கிறது. இதனால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
TN Cabinet meeting: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செப்.26-இல் தமிழக அமைச்சரவை கூட்டம்..
இன்றைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 69.85அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1544கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,069 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தின் மற்ற அணைகளின் நிலவரம் பின்வருமாறு:-
Periyardam: 134.45 (142)feet
Capacity: 5738 Mcft
Inflow: 454 cusec
Outflow: 1778 cusec
Manjalar
Level- 55.0(57) feet
Capacity:435.32 Mcft
Inflow: 30 cusec
Outflow: 0 cusec
Sothuparai dam
Level- 125.78 (126.28)feet
Capacity: 99.38 Mcft
Inflow: 0 cusec
Outflow:3 cusec
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்