IndiGo Mega Sale: லைஃப் டைம் ஆஃபர்..! ரூ.1க்கு விமான டிக்கெட், உள்ளூர் தொடங்கி உலக டூர் - ரூ.4,499 மட்டுமே -ஜன.16 வரை
IndiGo Mega Sale: இண்டிகோ நிறுவனம் வெறும் ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் குறுகிய கால சலுகையை அறிவித்துள்ளது.

IndiGo Mega Sale: இண்டிகோ நிறுவனம் உள்ளூர் தொடங்கி உலக நாடுகளுக்கான டிக்கெட்டை, அதிகபட்சமான வெறும் ரூ.4,499 ரூபாய்க்கு முன்பதிவு செய்யும் சலுகையை வெளியிட்டுள்ளது.
இண்டிகோ மெகா சேல்:
இண்டிகோ விமான நிறுவனம் “Sale Into 2026” என்ற பெயரில் விமான டிக்கெட்டுகளுக்கு குறுகிய கால் சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் மற்றும் உலக நாடுகளுக்கான டிக்கெட் கட்டணத்தில் மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. பொதுவான பயணம் மேற்கொள்பவர்களுக்கும், கோடைகாலத்தில் பட்ஜெட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள திட்டமிடுபவர்களுக்கும் இது ஒரு பயனுள்ள சலுகையாக இருக்கும் என கூறப்படுகிறது. நிறுவனத்தின் செய்தி வெளியீட்டின்படி, உள்ளூர் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு வெறும் ரூ.1,499-ல் தொடங்குகிறது. அதேநேரம், வெளிநாடுகளுக்கான டிக்கெட் கட்டணம் வெறும் ரூ.4,499ல் தொடங்குகிறது. மேலும் கூடுதல் சேவைகளான பேக்கேஜ் மற்றும் இருக்கையை தேர்வு செய்வதற்கான கட்டணத்திலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது தற்போது பயன்பாட்டிற்கு வந்து இருப்பதாகவும், ஜனவரி 16ம் தேதி வரை இந்த சலுகை அடிப்படையில் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் மூலமான பயணமானது ஜனவரி 20ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ம் தேதி வரை அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான டிக்கெட் கட்டண விவரங்கள்:
இண்டிகோ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, உள்ளூரில் ஒரு வழி பயணத்திற்கான டிக்கெட் கட்டணமானது ரூ.1,499ல் தொடங்குகிறது. அதேநேரம், சர்வதேச பயணத்திற்கான டிக்கெட் ரூ.4,499-ல் தொடங்குகிறது. நிறுவனத்தின் ப்ரீமியம் இண்டிகோஸ்ட்ரெட்ச் கேடகிரியும் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டும் சலுகையில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.9,999ல் தொடங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு விமான சேவை நிறுவனமாக திகழும் இண்டிகோ, நாளொன்றிற்கு 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான விமானங்களை இயக்கி, 90-க்கும் அதிகமான இலக்குகளுக்கு பயணிக்கிறது. அதேநேரம், சர்வதேச அளவில் ஆசியா, ஆஃப்ரிக்கா மற்றும் ஐரோப்பியா என 40-க்கும் அதிகமான வெளிநாட்டு இலக்குகளுக்கும் இண்டிகோ விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இண்டிகோ விமான டிக்கெட் முன்பதிவு
சலுகை அடிப்படையிலான முன்பதிவானது கடந்த 13ம் தேதி தொடங்கிய நிலையில், ஜனவரி 16 வரை திறந்திருக்கும். இந்த விற்பனையின் கீழ் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ஜனவரி 20 முதல் ஏப்ரல் 30 வரையிலான பயணங்களுக்குப் பயன்படுத்தலாம். பயணத் தேதிக்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்பே இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும். கட்டண விவரங்களை இண்டிகோவின் முன்பதிவு தளங்களை கண்டு தெரிந்துகொள்ளலாம்..
தள்ளுபடி கட்டணங்களை தாண்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட கூடுதல் சேவைகளிலும் இண்டிகோ தள்ளுபடிகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 6E கூடுதல் சேவைகளின் மீது 70% வரை தள்ளுபடி பெறலாம், அதே நேரத்தில் முன்கூட்டியே செலுத்திய அதிகப்படியான சாமான்களுக்கு 50% வரை தள்ளுபடி மற்றும் நிலையான இருக்கை தேர்வுக்கு 15% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதல் வசதியை எதிர்பார்க்கும் பயணிகளுக்கு , தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு வழித்தடங்களில் அவசரகால XL இருக்கைகள் ரூ.500 முதல் வழங்கப்படுவதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.

ரூ.1-க்கு விமான கட்டணம்
அண்டிகோ அறிவித்துள்ள அதிரடியான சலுகையில், கைக்குழந்தைகளான தள்ளுபடி கவனத்தை அறிவித்துள்ளது. அதன்படி, 0 முதல் 24 மாத வயதுடைய குழந்தைகள் வெறும் ஒரு ரூபாய் கட்டணத்தில் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொள்ளலாம். இந்த சலுகை இண்டிகோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது செயலி (நேரடி சேனல்கள்) மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே பொருந்தும். ஒட்டுமொத்தமாக, இந்த சலுகையானது, முன்கூட்டியே திட்டமிடவும், விமான டிக்கெட்டுகள் மற்றும் முக்கிய கூடுதல் கட்டணங்களைச் சேமிக்கவும் விரும்பும் பயணிகளுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.























