TN Cabinet meeting: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செப்.26-இல் தமிழக அமைச்சரவை கூட்டம்..
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 26-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 26-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. சட்டப்பேரவைக் கூட்டம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் காய்ச்சலை ஒட்டி சுகாதாரப் பணிகளைத் தீவிரப்படுத்துதல், வடகிழக்கு பருவமழையை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாப்பது பற்றியும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்துவதுத் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை, பரந்தூர் விமான நிலையம் தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 11ஆம் தேதி மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
காலை சிற்றுண்டித் திட்டம்
அதேபோல செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் அன்று பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதற்கட்டமாக காலைச் சிற்றுண்டி திட்டமானது செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
#JUSTIN | வரும் 26 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் https://t.co/wupaoCzH82 | #TNGovt #Mkstalin pic.twitter.com/WClXm4gqDy
— ABP Nadu (@abpnadu) September 23, 2022
இந்த நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 26ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட உள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது.
அதேபோல, தமிழகத்தில் அதிகரித்து வரும் காய்ச்சலை ஒட்டி சுகாதாரப் பணிகளைத் தீவிரப்படுத்துதல், வடகிழக்கு பருவமழையை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாப்பது பற்றியும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்துவதுத் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.