தேனி: அருள்மிகு மஹாசக்தி மாசாணி அம்மன் கோவிலின் சிறப்புகள்...!
இக்கோவிலில் குழந்தையில்லாத தம்பதியர்கள் வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும், நோய் நொடியிலிருந்து குணமடைந்து வருவதாகவும் ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து சுற்றுலா தளமாக விளங்கும் சுருளி அருவி செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் தொட்டமாந்துறை எனும் நெற்களம் இருந்த இடத்தில் உள்ள களத்துமேட்டில் வயல்வெளிகள் சூழ அழகிய தோற்றத்துடன் 20 அடி நீளமுள்ள சிலை வடிவில் படுத்தவாறு (சயனித்த நிலையில்) காட்சியளிக்கும் மஹாசக்தி மாசாணி அம்மன் திருக்கோவில் உள்ளது.
அழகிய வயல்வெளிகள் சூழ ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் சாமாண்டி அம்மன் கோவிலின் வரலாறும், சிறப்புகளும்
இயற்கை அழகுடன் கூடிய தோற்றத்துடன் கோயிலின் அமைப்பு இருப்பதால் இங்கு வருபவர்கள் எந்தவித மன சங்கட நிலையில் வந்தாலும் கோயிலின் தோற்றம் மற்றும் அங்குள்ள சூழல் வருவோர்களின் மன நிலையை மாற்றுகிறதாம். கோயிலின் நுழைவு வாயிலில் சுமார் 25 அடி உயரம் கொண்ட மடப்புரம் காளியம்மன் , கோவிலில் மாசாணி அம்மனுக்கு நேர் எதிராக 6 அடி உயரம்கொண்ட மகாமுனியின் தோற்றம் பார்ப்பவர்களை பக்தி பரவசமடைய செய்கிறது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் இக்கோவிலில் உள்ள மாசாணி அம்மன் தலைக்கு மேல் ஸ்ரி சக்கரமும், அனைத்து தெய்வங்களையும் உள்ளடக்கிய மடப்புரம் காளியம்மனுக்கு காலடியில் உள்ள மகாமேரு போன்ற சிறப்புகள் கொண்டுள்ளது இக்கோயில்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பெளர்ணமி நாளன்று இக்கோவில் நிஸ்மலா யாக பூஜை (மிளகாய் பூஜை) நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தக்சனாய புன்னியகாலமான ஆடி மாதம் முதல் ஆடி அமாவாசை தினத்தன்று கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழா 18 நாட்கள் நடக்கும்.
தேனி : காசிக்கு நிகரான பெரியகோவில், பெரியகுளம் முருகன் கோவிலுக்கு ஏன் இத்தனை சிறப்பு..
இதில் 13ம் நாள் காலை பக்தர்களின் பால்குடம், அன்றைய நாள் இரவு மாசாணி அம்மனின் மயான பூஜை ,14ம் நாள் காலை சக்தி கும்பம், அடுத்த நாள் அக்னி சட்டி, ஆயிரம் கண்பானை எடுத்தல், மாலை திருத்தேரோட்டம், 16ம் நாள் அக்னி குண்டம், திருவிழா அன்று மாலை முளைப்பாரியும் ,அம்மன் பூஞ்சோலை செல்லுதல், 17ம் நாள் காலை மஞ்சள் நீராடல், அன்று மாலை பொங்கல், புளியோதரை, தக்காளிசாதம், இனிப்பு வகைகள் படையல்கொண்ட மகாமுனி பூஜையும் நடத்தப்படுவதும், பக்தர்ள் ஏராளமானோர் இக்கோவிலுக்கு வந்து செல்வதும் வழக்கமாக்கியுள்ளது.
தேனி : சுருளி மலையில் உள்ள பூத நாராயணன் கோயிலின் சிறப்புகள் தெரியுமா?
இறுதி நாளாக 18ம் நாள் உற்சவ சாந்தி திருவிழாவுடன் நிறைவடையும். இக்கோவிலில் குழந்தையில்லாத தம்பதியர்கள் வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும், நோய் நொடியிலிருந்து குணமடைந்து வருவதாகவும் ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்