தேனி : சுருளி மலையில் உள்ள பூத நாராயணன் கோயிலின் சிறப்புகள் தெரியுமா?
தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலங்களில் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது அருள்மிகு பூத நாராயண சுவாமி திருக்கோயில்.
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சுருளி அருவி. இந்த அருவியில் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது அருள்மிகு பூதநாராயண சுவாமி திருக்கோயில். சுருளியாறு, வெண்ணியாறு, கன்னிமார் ஊற்று ஆகிய மூன்று மூலிகை நீர்களும் சங்கமிக்கும் இத்தலத்திற்கு அருகிலேயே சுருதியுடன் கூடிய சுருளி எனும் சுரபி நதி நீர் அருவியாக கொட்டுகிறது.
கானகத்தின் நடுவே பல மூலிகைகள் கலந்து அற்புத சக்தியுடன் விழும் இந்த அருவியில் நீராட தீராத நோய்கள் தீரும் என்று ஐதீகம் உள்ளது. சுற்றுப்பிரகாரத்தில் உக்கிர நரசிம்மர், தட்சிணாமூர்த்தி, வல்லப கணபதி நவகிரக சன்னதிகள் உள்ளன. முன்னோர்கள் முக்தி அடைய காசி ராமேஸ்வரம் சென்று புண்ணிய காரியம் செய்ய முடியாதோர் அமாவாசை நாளில் இங்கு வந்து திதி கொடுக்கின்றனர். இத்தலம் புண்ணியங்கள் செய்யும் தலமாகவும் மட்டுமின்றி சிறந்த சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.
இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு அவள் ,பழங்கள் ,நெய்வேத்தியம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இத்தலத்தில் விநாயகர் வல்லப கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். வருடந்தோறும் சித்திரையில் மூன்று வார திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி அமாவாசை ,தை அமாவாசை, தமிழ் புத்தாண்டு ,சித்ரா பௌர்ணமி எனும் விசேஷ நாட்களில் இங்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடப்பது வழக்கம்.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள சுரபி நதியில் நீராடி அதாவது சுருளி அருவியில் நீராடி சுவாமியை வணங்கிட பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும். துன்பங்கள் நிவர்த்தி அடையும். நல்வாழ்வு கிட்டும் என்று பக்தர்கள் நம்புவதால் பல மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் இந்த கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இங்கு நேர்த்திக்கடனாக நினைத்த காரியம் வெற்றிபெற சுவாமி மாலைகள் சாத்தி தேங்காய் பழம் அபிஷேகம் செய்து நைவேத்தியம் படைத்து அன்னதானமும் வழங்கப்படுகின்றன.
RRR : ரூ.1000 கோடி வசூல் படைத்து ஆர்ஆர்ஆர் சாதனை.. அமீர்கானுடன் கொண்டாடிய படக்குழு...!
இந்த தலத்தின் பெருமையாக மதுரையை எரித்த கண்ணகி ஆவேசத்துடன் வந்தபோது நெடுவேள் குன்றம் எனும் சுருளிமலை வழியாகவே கடந்து சென்று பின் கூடலூர் வண்ணாத்திப்பாறைக்கு சென்றதாகவும் தகவல்கள் உண்டு. இயற்கையின் கட்டுக்கடங்காத சக்திக்கு உதாரணமாக உள்ள இம்மலையை குறித்து இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் அழகாகவும் பாடியுள்ளார். புண்ணிய தீர்த்தங்களையும் பல அற்புதங்களையும் புரியும் எண்ணற்ற மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர். இத்தலத்தில் மகாவிஷ்ணு என்ற கோலத்தில் பூத நாராயணனாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் கடவுள் பெருமாள்.