மேலும் அறிய

விபத்து , ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை மக்கள் கொண்டாட வேண்டும் - தேனி ஆட்சியர் வேண்டுகோள்

உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால்  சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். 

விபத்து , ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை மக்கள் கொண்டாட வேண்டும் - தேனி  ஆட்சியர் வேண்டுகோள்

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி  உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018 ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

மேலும், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும்,  திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

மாண்புமிகு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று  காலை 6 முதல் 7 மணி வரையும்,  இரவு 7 முதல்   8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.  இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்று,  கடந்த ஆண்டைப் போலவே   காலை 6 முதல் 7 மணி வரையிலும்,  இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் .

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.           

விபத்து , ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை மக்கள் கொண்டாட வேண்டும் - தேனி  ஆட்சியர் வேண்டுகோள்                                                                 

அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின்  செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கீழ்கண்டவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

  1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
  2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

விபத்து , ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை மக்கள் கொண்டாட வேண்டும் - தேனி  ஆட்சியர் வேண்டுகோள்

தவிர்க்க வேண்டியவை

  1. அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
  2. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  3. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

எனவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay TVK Politics: விஜய் அரசியல் பயணம் - மக்கள் இயக்கம் தவெக கட்சியாக உருவெடுத்த வரலாறு, விதை போட்டது எங்கே?
Vijay TVK Politics: விஜய் அரசியல் பயணம் - மக்கள் இயக்கம் தவெக கட்சியாக உருவெடுத்த வரலாறு, விதை போட்டது எங்கே?
TNPSC Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ, பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி?
TNPSC Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ, பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி?
TVK Maanadu:
TVK Maanadu: "தல ரசிகன், தளபதி தொண்டன்" அஜித் ரசிகர்களால் ஆனந்தத்தில் விஜய் ரசிகர்கள்!
Breaking News LIVE 26th OCT 2024: எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம் - விஜய், தவெக தலைவர்
எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம் - விஜய், தவெக தலைவர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Woman Attacked Telugu Actor| ”திருட்டு பயலே உன்ன விடமாட்ட”வில்லன் நடிகருக்கு அடி!ஆந்திர பெண் ஆவேசம்!Vijay Maanadu : 100 அடி உயரத்தில் கொடி உச்சியில் வைக்கப்பட்ட கலசம்கெத்து காட்டும் விஜய்Udhayanidhi : தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய அரசு ஊழியர்கள்! உதயநிதி நிகழ்ச்சியில் சர்ச்சை!TVK Vijay Letter | ’’2026-ல் வெற்றி நிச்சயம்த.வெ.க மாநாடுக்கு தயாரா?’’தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay TVK Politics: விஜய் அரசியல் பயணம் - மக்கள் இயக்கம் தவெக கட்சியாக உருவெடுத்த வரலாறு, விதை போட்டது எங்கே?
Vijay TVK Politics: விஜய் அரசியல் பயணம் - மக்கள் இயக்கம் தவெக கட்சியாக உருவெடுத்த வரலாறு, விதை போட்டது எங்கே?
TNPSC Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ, பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி?
TNPSC Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ, பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி?
TVK Maanadu:
TVK Maanadu: "தல ரசிகன், தளபதி தொண்டன்" அஜித் ரசிகர்களால் ஆனந்தத்தில் விஜய் ரசிகர்கள்!
Breaking News LIVE 26th OCT 2024: எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம் - விஜய், தவெக தலைவர்
எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம் - விஜய், தவெக தலைவர்
Chennai Diwali Traffic: தீபாவளி கொண்டாட, சொந்த ஊர் போறீங்களா ? எப்ப போலாம் எந்த வழியில போலாம் ?
Chennai Diwali Traffic: தீபாவளி கொண்டாட, சொந்த ஊர் போறீங்களா ? எப்ப போலாம் எந்த வழியில போலாம் ?
TVK Maanadu: ’உங்கள் பாதுகாப்புதான் முக்கியம்: இதைக் கட்டாயம் தவிருங்கள்’- தவெக தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
TVK Maanadu: ’உங்கள் பாதுகாப்புதான் முக்கியம்: இதைக் கட்டாயம் தவிருங்கள்’- தவெக தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
IND vs NZ 2nd Test: 359 ரன்கள் டார்கெட்! இமாலய இலக்கை எட்டிப்பிடிக்குமா இந்தியா? அச்சுறுத்துமா நியூசிலாந்து?
IND vs NZ 2nd Test: 359 ரன்கள் டார்கெட்! இமாலய இலக்கை எட்டிப்பிடிக்குமா இந்தியா? அச்சுறுத்துமா நியூசிலாந்து?
Madurai: திமுக கூட்டணி நிச்சயமாக உடையும், தேர்தல் நேரத்தில் தெரியும், wait and see... - திண்டுக்கல் சீனிவாசன்
Madurai: திமுக கூட்டணி நிச்சயமாக உடையும், தேர்தல் நேரத்தில் தெரியும், wait and see... - திண்டுக்கல் சீனிவாசன்
Embed widget