மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை.. கணவருக்கு ஆயுள் தண்டனை
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்தது சாட்சியங்களின் அடிப்படையில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த கேப்டன் பிரபாகரன் என்ற இளைஞரும், தஞ்சாவூரைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணும், திருமணம் முடித்து இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 04.10.2020 ஆம் ஆண்டு கவிதா குளியல் அறையில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக கணவர் கேப்டன் பிரபாகரன் கவிதாவின் சகோதரர் கோவிந்தராஜ்க்கு தொலைபேசியில் அழைத்த தகவல் கொடுத்துள்ளார்.
மகேஷ் குமார் அகர்வால் உள்பட 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு அரசு!
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் கவிதாவின் உடலில் உள்ள காயங்களை பார்த்துவிட்டு தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், இறந்த கவிதா அடிக்கடி கணவர் வரதட்சணை பணம் கேட்டு துன்புறுத்துகிறார் என சகோதரருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ள நிலையில் சகோதரி கவிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறி ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
"திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகளை தவறாக சித்தரிக்கக்கூடாது" உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து!
கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.மேலும் விசாரணையில் வரதட்சணை பணம் கேட்டு அடிக்கடி மனைவியை துன்புறுத்தியதாகவும், இதனால் கவிதா மற்றும் அவரது கணவர் கேப்டன் பிரபாகரனுக்கும், இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் 04.10.2020 அன்று மனைவி கவிதாவை அவரது கணவர் கேப்டன் பிரபாகரன் அடித்து துன்புறுத்தி கொலை செய்துவிட்டு குளியல் அறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகம் ஆகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை அறிக்கையை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
Breaking News LIVE: “கல்வி ஆகச்சிறந்த செல்வம்”: பழங்குடி மாணவிக்கு ஜிவி பிரகாஷ் வாழ்த்து
இதனைத் தொடர்ந்து இன்று வழக்கு விசாரணை முடிவுற்று மனைவி கவிதாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்தது சாட்சியங்களின் அடிப்படையில் கொலை குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளி கேப்டன் பிரபாகரனுக்கு ஆயுள் தண்டனையும், மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி அனுராதா தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து குற்றவாளி கேப்டன் பிரபாகரனை மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.