(Source: ECI/ABP News/ABP Majha)
தேனி: நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் கலசம் திருடு போனதாக புகார்
பழமை வாய்ந்த சிலைகள் களவாடப்பட்டிருப்பதாகவும் சின்னமனூர் காவல் நிலையத்தில் கோவிலை பராமரித்து வந்த சீனிவாச பூசாரி புகார் மனு அளித்துள்ளார்.
குச்சனூரில் உள்ள வரதராஜ பெருமாள் என்ற மேல பெருமாள் கோயிலில் கலசம் திருடு போனதாகவும், தனிநபரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு இந்து சமய அறநிலை துறையிடம் ஒப்படைக்க கோரி பொதுமக்கள் மற்றும் இந்து எழுச்சி அமைப்பினர் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் திருக்கோவில். இந்த கோவில் மேல பெருமாள் கோவில் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோயில் ஆனது ஸ்ரீனிவாசர் என்பவர் பராமரித்து வந்துள்ளார். பழமை வாய்ந்த திருக்கோவிலின் கலசங்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் தனிநபர்கள் அதை எங்கு வைத்துள்ளார்கள் என்றும் இன்று வரை தெரியவில்லை என்றும் பழமை வாய்ந்த சிலைகள் களவாடப் பட்டிருப்பதாகவும் சின்னமனூர் காவல் நிலையத்தில் கோவிலை பராமரித்து வந்த சீனிவாச பூசாரி அவர்கள் புகார் மனு அளித்துள்ளார்.
Pani Puri: பானிபூரியில் புற்றுநோய் அபாயமா? வெளியான அதிர்ச்சி தகவல்..
இந்து சமய அறநிலைத் துறையினர் இதற்கு முழு பொறுப்பேற்று தனிநபரின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட திருக்கோவிலை பரம்பரை பூசாரியான சீனிவாசரிடம் ஒப்படைக்க பொதுமக்களும் இந்து எழுச்சி முன்னணியினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர். அது மட்டும் அல்லாது காணாமல் போன பழமை வாய்ந்த கலசங்களையும் சிலைகளையும் கண்டுபிடித்து மீண்டும் கோவிலுக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கும் ஒப்படைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கோவிலை கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் திருடப்பட்ட கலசம் மற்றும் சிலைகளை காவல் துறை, திருடப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து இந்து அமைப்பினரையும் ஒன்று திரட்டி போரட்டம் நடத்த போவதாக இந்து எழுச்சி முன்னணியினர் தெரிவித்தனர், மேலும் குச்சனூரில் கோவில் கலசம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.