மேலும் அறிய

தேனி: தொடர் கஞ்சா வழக்குகளில் சிக்கிய 2 பேரின் சொத்துக்கள் முடக்கம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தொடர் கஞ்சா வழக்குகளில் சிக்கிய இரண்டு பேரின் சொத்துக்கள் முடக்கம் . உறவினர்களின் சொத்துக்கள் என சுமார் 59 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை முடக்கம்.

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினருக்கு சொந்தமான வீடு, இடம், கார் மற்றும் இரு சக்கர வாகனம் என ரூபாய் 59 லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கவும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அவர்கள் சொத்து மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்துகளையும் முடக்கி வருகிறது.

தேனி:  தொடர் கஞ்சா வழக்குகளில் சிக்கிய 2 பேரின் சொத்துக்கள் முடக்கம்

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்களின் சொத்துகள் மற்றும் அவர்களின் தங்கை மற்றும் பாட்டி சொத்துகளையும் தேனி மாவட்ட காவல்துறையினர் முடக்கி உள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டியை சேர்ந்தவர் கங்கா தேவா என்பவர் பல்வேறு கஞ்சா வழக்குகள் இவர் மீது பதியப்பட்ட நிலையில் இவரின் அனைத்து சொத்துகளையும் காவல்துறை தற்போது முடக்கியுள்ளது.

தேனி:  தொடர் கஞ்சா வழக்குகளில் சிக்கிய 2 பேரின் சொத்துக்கள் முடக்கம்

பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள கங்காதேவாவின் 41 லட்சம் மதிப்பிலான வீடு, 6 லட்சம் மதிப்பிலான போலிரோ கார்,  1 லட்சம் மதிப்பிலான இரு இருசக்கர வாகனங்கள், கங்காதேவாவின் சகோதரியான வெண்ணிலாவிற்கு சொந்தமான 6 லட்சம் மதிப்பிலான இடம் , கங்காதேவாவின் உறவினர்களுக்கு சொந்தமான என மொத்தம் 54 லட்சம் மதிப்பிலான சொத்துகளை முற்றிலுமாக முடக்கியுள்ளது. இதே போல கைலாசபட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மற்றொரு குற்றவாளியான பிரபாகரன் என்பவரின் பாட்டியான திருமூலம்மாள் என்பவருக்கு சொந்தமான 4.50 லட்சம் மதிப்பிலான இடத்தையும் தேனி மாவட்ட காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.

தேனி:  தொடர் கஞ்சா வழக்குகளில் சிக்கிய 2 பேரின் சொத்துக்கள் முடக்கம்

இந்த இரண்டு கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து 59 லட்சம் மதிப்பிலான சொத்துகளை தேனி மாவட்ட காவல்துறையினர் முடக்கியுள்ளனர். முன்னதாக ஒடைபட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 பேரின் வங்கி கணக்கையும், மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான 23 லட்சம் மதிப்பிலான வீட்டை காவல்துறையினர் முடக்கி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த ஆண்டு இதுவரை தேனி மாவட்டத்தில் 169 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யபட்டு 484 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்ட நிலையில் ,278 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர்- இவர்களின் 34 பேர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில அடைக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget