முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை தொடவுள்ளது; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தமிழக, கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
தெர்மாகோல் சாதனையை முறியடித்த சின்னவருக்கு வாழ்த்துக்கள்.. பாஜக தரப்பு ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு
முல்லைப்பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 141 அடியை எட்டியிருந்தது . நீர்வரத்து வினாடிக்கு 1,166 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 511 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மத்திய நீர்வள ஆணைய அமலாக்கத்தின் ரூல்கர்வ் முறைப்படி, இந்த மாதம் (டிசம்பர்) முதல் அடுத்த ஆண்டு மே 31-ந்தேதி வரை முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
Cervical Cancer Vaccine : கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி.. விரைவில் இந்தியாவில்? விவரம் என்ன?
அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதால், தமிழக பொதுப்பணித்துறையினர், கேரள மாநிலம் வல்லக்கடவு, சப்பாத்து உள்ளிட்ட பகுதி மக்களுக்கு 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர். கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியபோது கேரள பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயரும்போது, இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்