தேனி: குரங்கு அம்மை நோயை தடுக்க தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு முகாம்
தமிழக, கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் கம்பம்மெட்டு, குமுளி, போடி பகுதிகளில் சுகாதாரத் துறைனர் சார்பாக குரங்கு அம்மை நோயை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழக, கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் கம்பம்மெட்டு, குமுளி, போடி பகுதிகளில் சுகாதாரத் துறைனர் சார்பாக குரங்கு அம்மை நோயை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு முகாம் நடைபெறுகிறது.
கேரளாவில் குரங்கு அம்மை நோய் பரவி வருவதால் தேனி மாவட்டத்தில் தமிழக, கேரள எல்லைகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் கொரோனோ, சிக்கன் குனியா, பறவை காய்ச்சலை தொடர்ந்து, தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. தென் மாநிலங்களில் கேரளாவில் மட்டுமே குரங்கு அம்மை நோய் காணப்பட்டதால் தென் மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மத்திய அரசு கூறியுள்ளது.
Viruman Audio Launch LIVE: மதுரையில் விருமன் ஆடியோ வெளியீட்டு விழா: நொடிக்கு நொடி அப்டேட் இதோ!
அதனைத் தொடர்ந்து தமிழக, கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாக இருப்பதால் தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கக்கூடிய போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி போன்ற மூன்று நெடுஞ்சாலை வழித்தடங்கள் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் தமிழக, கேரள எல்லை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் விவசாயம் அதிக அளவில் நடைபெறுவதால் தமிழகத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஜீப்புகளில் கூலி வேலைக்கு ஆட்கள் கேரளாவிற்கு சென்று தொழில் செய்துவிட்டு திரும்பி வருகின்றனர்.
‛முப்பது வருட தன்னம்பிக்கை நீங்கள்..’ உருகி உருகி ட்வீட் செய்த அஜித்தின் அடுத்தப்பட இயக்குநர்!
எனவே கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களிடம் கொரோனா, குரங்கு அம்மை போன்ற நோய் தாக்குதல்கள் ஏதேனும் தென்படுகிறதா என்பது குறித்து குமுளி அடிவாரப் பகுதியான லோயர் கேம்ப் பகுதியிலும், கம்பம் மெட்டு அடிவாரப் பகுதியான கம்பத்திலும் போடி மெட்டு பகுதிகளிலும் சுகாதாரத் துறையினர் சிறப்பு முகாம் அமைத்து தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Agent tina: சூப்பர் ஸ்டாருடன் இணையும் ஏஜென்ட் டீனா... வெளியானது புதிய அப்டேட்!
கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களிடம் காய்ச்சல், தலைவலி மற்றும் குரங்கு அம்மைக்கான நோய் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா எனவும் அவ்வாறு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்