தேனி : ஆளுநர் தலைமையில் மாநில அளவிலான பெண் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம்
மாநில அளவிலான பெண் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் தேனியில் நடைபெற்றது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் தனியார் (சென்டெக்ட்) வேளாண் அறிவியல் மையத்தில் மாநில அளவிலான பெண் விவசாயிகள் தொழில் முனைவோர் சுய உதவிக்குழு அமைப்புகள் மற்றும் மா உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் முன்னதாக மதிப்புக் கூட்டப்பட்ட விவசாய பொருட்கள் கண்காட்சியினை பார்வையிட்டார். வெற்றி பெற்ற பெண் தொழில் முனைவோர்கள் தங்களின் வெற்றிக்கான வழிமுறைகள் குறித்து பேசினார்கள். அதனைத் தொடரந்து மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மகளிர் குழுக்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கி மா சாகுபடி வாழை சாகுபடி குறித்த புத்தகங்களை வெளியிட்டார்.
அதன் பின்னர் அவர் பேசுகையில் பெண் தொழில் முனைவோர் மையத்தின் மூலம் விவசாயிகளையும் பெண் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை பார்த்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும் நம் நாடு விவசயாம் சார்ந்த நாடு நம் நாட்டில் 60 சதவிகிதம் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.அனைத்து துறையிலும் முன்னேறிய நம் நாடு விவசயாத்தில் மட்டும் பின் தங்கியுள்ளது.அதனை மேன்மை அடையச் செய்ய வேண்டும்.நீண்ட நாட்களாக சட்டம் தீட்டுபவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை மிக முக்கியமாக தொழில் வளர்ச்சி மற்றும் தொழில் நுட்ப சேவை வளர்ச்சி மூலமாக செய்து வருகின்றார்கள் மற்ற நாட்டை விட தனி நபர் வருமானம் நமது நாட்டில் குறைவாக உள்ளது அதை பெருக்க வேண்டும்.
சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலத்தில் அனைவருக்கும் உணவு கிடைக்காத சூழ்நிலை இருந்தது. தற்பொழுது நாம் உணவு தட்டுப்பாடு இல்லாமல் வெளிநாடுகளுக்கும் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்த்திருப்பதற்கு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களே காரணம்,தமிழகத்தில் மற்ற துறைகளை விட விவசாயத்துறைக்கு அரசு பங்கீடு வழங்குவது குறைவான அளவே உள்ளது .
அதனை ஊக்குவிக்க தமிழக அரசின் பங்கீடு அதிக அளவில் இருக்க வேண்டும்.பாரத பிரதமரால் பொருளாதரம் முன்னேறி வருகிறது. பத்தாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு நாம் உயர்ந்துள்ளோம், நாட்டில் விவசாயிகள் பெண்கள், இளைஞர்கள், ஏழ்மையானவர்கள், என நான்கு பிரிவில் உள்ள நம் மக்கள் சந்தோசமே நாட்டின் வளர்ச்சி என்றும் பாரத பிரதமர் விவசயாத்தை ஊக்குவித்து விவசாயிகளை பாதுகாக்க கடந்த ஆண்டுகளில பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். இன்றைக்கும் இங்கு நடந்த விவசாய கண்காட்சியில்பெண்தொழில் முனைவோர்கள் விவசாய பொருட்களை மதிப்பு கூட்டி உள்ளனர்.
அதனைப் பார்த்தேன் மேலும் கூட்டுவதற்கு மத்திய அரசின் மூலம் அதிக அளவில் உதவிகள் செய்யப்படும். தேனி மாவட்டம் தமிழகம் மற்ற மாவட்டங்களை விட வளர்ச்சியில் இறுதியாக உள்ளது. இந்த மாவட்டத்தில் தனி நபர் வருமானம் மிகவும் குறைவாக உள்ளது, அதனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம்.சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.மேலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து பெண் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்த வேண்டும்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் வேளாண் மையங்களுக்கு தேவையான தகவல்களை வழங்கி பெண் விவசாய தொழில் முனைவோரை உருவாக்கி விவசாய பொருட்களை மதிப்பு கூட்டி அவர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு அன்பான வேண்டுகோள் தமிழ்நாடு வேளாண் மையம் மற்றும் வேளாண் பல்கலை கழகத்தில் தங்களின் விவசாய பயிர் பிரச்சினையை தெரிவித்து தகுந்த வழிமுறைகளை பெற்று விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு நாட்டின் விவசாய வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
மற்ற மாநிலங்களை விட சிறந்த விவசாயிகள் தமிழகத்தில் தான் இருக்கின்றீர்கள் அவர்களின் வளர்ச்சி நமது நாட்டின் வளர்ச்சி நமது லட்சியம் வளர்ச்சி அடையும் பாரதம் என்ற பிரதமர் திட்டத்தில் இணைந்து அனைவரும் பயன் பெறுவோம் என பேசினார். இந்த விழாவில் ஏராளமான விவசாயிகள் பெண் தொழில் முனைவோர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.