மேலும் அறிய
Advertisement
கொடைக்கானல் காட்டில் சில தினங்களாக எரிந்து வந்த காட்டுத்தீ முற்றிலுமாக அணைப்பு
கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை குறைக்க வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது - வனத்துறை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை காலத்தில் வனப்பகுதியில் காய்ந்த சருகுகளில் காட்டுத்தீ அவ்வப்போது பற்றி எரிவது வழக்கம். இந்த ஆண்டு கோடை சீசன் துவங்கிய முதல் வாரத்திலேயே காட்டுத்தீ மளமளவென பரவியதில், பல ஏக்கர் வனப்பகுதியில் இருந்த அரியவகை மரங்கள் கருகின. வனவிலங்குகள் இடம் பெயர்ந்தன. காட்டுத்தீயை அணைக்க போதிய நவீன உபகரணங்கள் இல்லாததால் தீயை அணைக்க வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். ஒருவழியாக கடந்த சில தினங்களாக தொடர்ந்து எரிந்து வந்த காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுமாடு, புள்ளிமான், யானைகள், புலி, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் நீரோடைகளில் தண்ணீர் குறைந்துள்ளது.
இதனால், வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கவும், உணவு, குடிநீர் தேவைக்காக அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்கும் வகையிலும் வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார், "வனத்துறை அமைத்துள்ள தொட்டிகளை சுத்தம் செய்து, டேங்கர் லாரிகள் மூலம் நீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணறுகள் உள்ள இடங்களில், அதன்மூலம் தேவையான நீர் பெறப்படுகிறது. கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை குறைக்க வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களையே தீத்தடுப்பு பணியாளர்களாக தற்காலிகமாக நியமித்துள்ளோம். அவர்கள் கோடைகாலம் நிறைவடையும் வரை பணியாற்றுவார்கள். எத்தனை நாட்கள் அவர்கள் பணியாற்றுகிறார்களோ அதற்குரிய ஊதியம் வழங்கப்படும். இதுதவிர, எங்கேனும் காட்டுத்தீ ஏற்பட்டால் அதை அணைக்க உதவ வேண்டும் என உள்ளூர் மக்களிடம் தெரிவித்துள்ளோம். பெரியநாயக்கன்பாளையத்தில் பற்றிய காட்டுத்தீயை அணைக்க உள்ளூர் மக்கள் உதவினர். யானைகளுக்கு தேவைப்படும் உப்புக்கட்டியை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளோம். அவை வந்தவுடன் யானை நடமாட்டம் உள்ள இடங்கள், தண்ணீர் தொட்டிகள், நீர்நிலைகளுக்கு அருகே வைக்கப்படும்"என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion