Keezhadi Excavation: கீழடி அகழாய்வில் குவியலாக கிடைத்த புதிய ஆச்சரியமான விஷயங்கள்... முழு விவரம் இதோ..!
தாழிக்குள் கிடைத்துள்ள சூது பவள மணிகளை வைத்து பார்க்கையில் இது மிகவும் வசதியான செல்வந்தருடைய முதுமக்கள் தாழியாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
![Keezhadi Excavation: கீழடி அகழாய்வில் குவியலாக கிடைத்த புதிய ஆச்சரியமான விஷயங்கள்... முழு விவரம் இதோ..! The surprise found in a pile of coral found in the excavation in Kontakhai Keezhadi Excavation: கீழடி அகழாய்வில் குவியலாக கிடைத்த புதிய ஆச்சரியமான விஷயங்கள்... முழு விவரம் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/08/cdb4b5efe3e237623eceadf0c0cd56ce1659960228284184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல்துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7 உள்ளிட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல்துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை அகழாய்வுப் பணி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாசிகள், கற்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, விளையாட்டு சில்லுகள் என் ஏகப்பட்ட பொருட்கள் கிடைத்து வருகின்றனர். 8-ம் கட்ட அகழாய்வில் 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த முதுமக்கள் தாழிகளை தொடர்ந்து அகழாய்வு செய்யும்பட்சத்தில் முதுமக்கள் தாழி உள்ளே நமது முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
![Keezhadi Excavation: கீழடி அகழாய்வில் குவியலாக கிடைத்த புதிய ஆச்சரியமான விஷயங்கள்... முழு விவரம் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/08/ccda6dd7a603d1879186919ad3c2fb481659959693559184_original.jpg)
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)