முல்லை பெரியாறு அணை விவகாரம்: கண்காணிப்பு குழுவே பேசி தீர்க்கும்படி உச்சநீதிமன்றம் பரிந்துரை
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை கண்காணிப்பு குழுவிடம் ஒப்படைத்து அவர்கள் வாயிலாகவே பேசி தீர்வு காண வேண்டும் என தமிழக,கேரள அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி 1895-இல் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. இதன் பராமரிப்பு பணிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அணையில் நீரை தேக்கவது மற்றும் அணையின் பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ .எம் . கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நடந்தது. அப்போது முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண புதிய அணை கட்டுவதை சிறந்த வழி என கேரளா அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு ஒன்றை பிறப்பித்தது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகம்,கேரளா இடையில் கருத்து வேறுபாடுகள் தொடர்கிறது. இருதரப்புக்கும் இடையே முறையான தகவல் பரிமாற்றம் இல்லை அணையின் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுகிறது. எனவே அணையின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைத்து அவர்களே தீர்த்து வைக்க பரிந்துரை செய்கிறோம். இதன் வாயிலாக அணை பாதுகாப்பு தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு கண்காணிப்பு குழுவில் வசமாகிறது.
கேரள அரசின் கோரிக்கைப்படி முல்லை பெரியாறு அணையின் கீழே புதிய அணை அமைப்பது குறித்து கண்காணிப்பு குழு வாயிலாக பேசி தீர்வு காணமுடியும். பேபி அணையை உருவாகியது போல மேலும் ஒரு புதிய அணையை அமைப்பதன் வாயிலாக முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பிரச்சினையை தீர்க்கமுடியும் என கண்காணிப்பு குழு கருதினால் அதை பரிந்துரைக்கலாம். அந்த பரிந்துரைக்கு இரு மாநில அரசுகளும் கட்டுப்படவேண்டும். கண்காணிப்பு குழுவின் பரிந்துரைகள் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இரு மாநில தலைமைச் செயலர்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
அதை நிறைவேற்றுவது தலைமைச் செயலாளரின் பொறுப்பாகும். நிறைவேற்றத் தவறினால் அதை நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். எனவே கண்காணிப்பு குழுவின் உத்தரவுகளை மாநில அரசுகள் மதிப்பதில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை இந்த வழக்கு விசாரணை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இரு மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தங்கள் தீர்ப்பு ஆலோசனைகளை வழங்கலாம் அதனடிப்படையில் இறுதியில் உத்தரவு பிறப்பிக்கப்படும் இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.